பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

121

போகிறான். அப்படி எவன் திறக்கிறானோ, அவனுக்குத்தான் தலைச்சீட்டுக் கிழிந்துவிடப் போகிறது. இதெல்லாம் நிச்சயமற்ற ஏற்பாடுதான். ஒரு யோசனை செய்தால், அதன் குறிப்பு கொஞ்சமும் தவறக்கூடாது. எந்த மனிதரை நோக்கி நாம் அம்பைச் செலுத்துகிறோமோ, அந்த மனிதரின் மேல் அந்த அம்பு தவறாமல் போய்த் தாக்க வேண்டும். அதுதான் பழுத்த யோசனை. அதைவிட்டு, இப்படிப்பட்ட நிச்சயமற்ற காரியத்தில் எல்லாம் இறங்குவது என் மனசுக்குப் பிடிக்கவில்லை.

இ. சேர்வைகாரன்:- நான் என்னுடைய யோசனை முழுதையும் சொல்லுகிறேன். அதன் பிறகு நீங்கள் ஆட்சேபனை இருந்தால் சொல்லுங்கள்.

மாசிலாமணி:- சரி; சொல்லும்.

இ. சேர்வைகாரன்:- அந்தப் பாம்புகளை ஒர் அடி சதுரமுள்ள ஒரு சிறிய மூங்கில் பெட்டிக்குள் வைத்துவிடச் செய்கிறது. அதன் மேல் கச்சேரியில் உபயோகிக்கப்படும் உயர்வான காகிதங்களைப் போட்டு அழகான டொயின் கயிற்றைக் கொண்டு பார்வைக்கு லட்சணமாகக் கட்டிவிடுகிறது. அதன் பக்கங்களில் நாலைந்து இடங்களில் காற்று உள்ளே போகவும் வரவும் சிறுசிறு துளைகள் விட்டுவிடுகிறது. அதுவுமன்றி, அப்படிக் கட்டியவுடனே அதிக நேரம் தாமதிக்காமல், ஒரு வண்டியில் அவசரமாகப் போய் மன்னார் குடியில் உள்ள அந்த மனிதரிடம் சேர்த்துவிட்டால், அவைகள் அதிகமாகச் சோர்ந்து போகாமல், மூர்க்கமாகவும் கோபமாகவும் பலமாகவும் வெளிக்கிளம்பும். என்னிடம் இருக்கும் உடைகளில் போலிஸ் எட்கான்ஸ்டேபிலின் உடுப்பு ஒரு ஜதை இருக்கிறது. அதைப் போட்டுக் கொண்டு பெட்டியை நானே நேரில் எடுத்துக் கொண்டு போய் அவருடைய பங்களாவில் சேர்த்து விட்டு வெளியில் வந்து வேஷத்தைக் கலைத்து விட்டு எங்கேயாவது ஒளிந்திருந்து மெதுவாக நழுவி வந்து விடுகிறேன். அந்தப் பெட்டியோடு ஒரு கடிதமும் தயார் செய்து கொண்டு போய்க் கொடுக்கப் போகிறேன். அந்தக் கடிதம் தஞ்சாவூர் ஜில்லா போலீஸ் சூப்பரின்டென்டெண்டு துரை திகம்பரசாமியாருக்கு