பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

மாயா விநோதப் பரதேசி

எப்போதும் வைத்திருக்கிறார்கள். பெட்டிக்குள்ளும் குடத்துக்குள்ளும் கொஞ்சமும் காற்று போகிறதற்கே மார்க்கம் இருக்கிறதில்லை. அப்படி இருந்தும் அது வெகுகாலம் ஜீவித்திருப்பதை நாம் பார்க்கவில்லையா. அதுவுமன்றி, பாம்புகள் புற்றிற்குள் பூமியின் கீழே உருண்டைப் போலச் சுருண்டு தானே எப்போதும் கிடக்கின்றன. உள்ளே காற்றே இராது. புற்று வாயின் வழியாக உள்ளே போகும் காற்று மகா சொற்பமாக இருக்கும். அதைக் கொண்டே பாம்புகள் ஜீவித்திருக்கின்றன. ஆகையால் பாம்புகளுக்கு நாம் தொளைகள் விடாவிட்டால்கூட, அவைகள் சாகப் போகிறதில்லை. ஆனாலும், அதிக எச்சரிப்பாக இருப்பதையும் கருதி, ஒரு கோணி ஊசி நுழையும்படியான துளைகள் ஐந்தாறு விட்டுவைப்போம். அதுவே போதுமானது. உள்ளே இருக்கும் பெட்டி இரண்டு விரற்கடை கனம் இருக்கும்படியாகச் செய்து கொண்டால், பாம்பின் நாக்கு வெளிவரையில் எட்டாது. அதுவுமன்றி, உள்ளே இருளில் கிடக்கும் பாம்பு நாம் வைத்திருக்கும் சிறிய தொளையைப் பார்த்து நாக்கை நீட்டவா போகிறது. அப்படி நீட்டினாலும், நாக்கில் அவ்வளவாக விஷம் இராது; அதுவுமன்றி, அந்தப் பெட்டியை நான் கையால் தொட்டே துக்கப் போகிறதில்லை. ஒரு கயிற்றைப் பெட்டியின் மேல் துக்குப் போட்ட மாதிரி கட்டி, கயிற்றைப் பிடித்துத் தூக்கிக் கொண்டு போகப் போகிறேன். அதே மாதிரி, திகம்பர சாமியாருடைய பங்களாவில் இருக்கும் பாராக்காரனிடம் கொடுக்கப் போகிறேன். ஆகையால் அந்த விஷயத்தில் யாதொரு கெடுதலும் ஏற்படா தென்பதை நீங்கள் நிச்சயமாக நம்பலாம். நான் இதை உடனே முடிக்கிறேன். இப்போதே நான் புறப்பட்டு அடுத்த ரயிலில் ஏறி தஞ்சாவூருக்குப் போகிறேன். நேராக போலிஸ் சூப்பரிண்டெண்டெண்டின் கச்சேரிக்குப் போய், அங்கே உள்ள என்னுடைய பழைய சிநேகிதர்களைப் பார்த்து விட்டு வருகிறவன் போல, துரை கடிதம் எழுதும் காகிதத்தில் நாலைந்து எடுத்துக் கொண்டு அடுத்த வண்டியிலேயே திரும்பி இங்கே வந்து விடுகிறேன். நாளைய தினம் காலையில் நான் உப்பிலியப்பன் கோவிலுக்குப் போய் பாம்புப் பிடாரனைக் கண்டு, நாளைக்கு மறுநாள் காலையில் நான் பெட்டியோடு