பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

மாயா விநோதப் பரதேசி

குறைந்தது, ஏழெட்டு மாசமாவது கர்ப்பம் தரித்திருக்கும்படி நீங்கள் செய்து விடுவீர்களானால், அது எல்லாவற்றிலும் உசிதமாக இருக்கும்.

மாசிலாமணி:- (சந்தோஷமாக நகைத்து) சேர்வைகாரரே! இது பேஷான யோசனை! நீர் சொல்லுகிறபடி செய்தால் கலியாணம் வெகு விநோதமாக இருக்கும். இவ்வளவு தூரம் யோசனை செய்து சொன்னரே கலியாணம் என்றால், மேளம் கிராமப் பிரதக்ஷிணம் முதலியவைகள் எல்லாம் வேண்டாமா?

இ. சேர்வைகாரன்:- (வேடிக்கையாகச் சிரித்து) மேளம் இல்லாமலா கலியாணம் நடக்கும். நாம் கலியாணத்தை மூன்றாவது கட்டில் வைத்துக் கொள்வோம். ஏதாவது ஒரு காரணம் சொல்லி, மேளக்காரர் சிலரைக் கூப்பிட்டு முதல் கட்டிலிருந்து கொஞ்ச நேரம் ஊதச் செய்து அனுப்பிவிட்டால் போகிறது. என்ன விசேஷம் என்று யாராவது கேட்டால், வீடு புதிதாகக் கட்டியது. ஆகையால் கிரகப்பிரவேசம் நடக்கிறதென்று சொல்லிவிட்டால், அதைக் கேட்டுக் கொண்டு போகிறார்கள். அல்லது, மேளமே இல்லாமல் கலியாணத்தை நடத்தி விட்டாலும், கலியாணம் நடந்து போய் விடுகிறது. மேளம் இல்லாததினால் இது கலியாணமாகாது என்று அந்தப் பெண் ஆட்சேபனை சொல்லப் போகிறாளா? அதொன்றும் இல்லை. அது போலவே கிராமப் பிரதக்ஷிணம் ஏன் செய்ய வில்லை என்றும் அந்தப் பெண் கேட்கப் போகிறதில்லை. கலியாணம் என்றால், தாலி கட்டுவது ஒன்று தான் எல்லா வற்றிலும் முக்கியமானது. அதை நாம் நிறைவேற்றி விடுவோம். எதற்காக என்றால், அந்தப் பெண் முதலில் படிமானத்திற்கு வருகிறதற்கும், நாம் திருப்பிக் கொண்டு போய்விட்ட பிறகு அவள் வேறே கலியானம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கும் இந்தச் சடங்கு அவசியமானதென்று நினைக்கிறேன்.

மாசிலாமணி:- சரி; உம்முடைய இஷ்டப்படியே எதை வேண்டுமானாலும் நடத்தும். ஆனால் ஒரு விஷயம் மாத்திரம் நீர் மனசில் நிச்சயமாக வைத்துக் கொள்ளும்; அந்தப் பெண் அழகாய் இருக்கிறாள் என்பதைக் கருதி நான் அவளை இங்கே