பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

131

கொண்டு வர ஆசைப்படவில்லை. அவளுடைய தகப்பன் செய்த படு மோசத்திற்காகப் பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே ஆவல்தான் என் மனசில் இருந்து துண்டுகிறது. ஆகையால் அவள் அழகாக இல்லாவிட்டால் கூட அவளைக் கொண்டு வந்து கெடுத்தனுப்ப வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. ஆகையால், அவளோடு கொஞ்சகாலம் பழகிய பிறகு அவளை அனுப்ப எனக்கு மனம் வராமல் போய்விடுமோ என்று நீர் கொஞ்சமும் சந்தேகப்பட வேண்டியதே இல்லை. அவள் விஷயத்திலாவது, அவளுடைய தகப்பன் விஷயத்திலாவது நான் ஒரு கடுகளவு இரக்கங் கொண்டால் கூட, எனக்குப் பெருத்த பாவம் சம்பவிக்கும். ஆகையால், எப்படி இருந்தாலும், அவளை நாம் கொஞ்ச காலம் வைத்திருந்த பின் அனுப்பிட வேண்டியதே முடிவு.

இ. சேர்வைகாரன்:- சரி; அது உங்களுடைய இஷ்டத்தைப் பொருத்தது. நான் எப்படியாவது சிரமப்பட்டு அந்தப் பெண்ணை உங்களிடம் கொண்டு வந்து சேர்த்து விடுகிறேன். அதன் பிறகு நீங்கள் உங்களுடைய சாமர்த்தியத்தின் படியும், மனப்போக்கின் படியும் நடந்து கொள்ளுங்கள். ஆனால் இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. சென்னைப் பட்டணமோ, இங்கே இருந்து தொலை தூரத்தில் இருக்கிறது. அவ்வளவு துரத்தில் இருந்து அந்தப் பெண்ணை நாம் அதன் மனசுக்கு விரோதமாகவும் வலுக் கட்டாயமாகவும் இந்த ஊருக்கு எப்படிக் கொண்டு வருகிறது என்ற யோசனைதான் திருப்திகரமாக புலப்படவில்லை.

மாசிலாமணி:- ரயிலில் வைத்துக் கொண்டு வருவது சாத்தியம் இல்லாத காரியம்.

இ. சேர்வைகாரன்:- ஆம் ஆம்; ரயிலில் கொண்டுவர முடியாது. நாம் நம்முடைய மோட்டார் வண்டியைக் கொண்டு போய், அதற்குள் வைத்துத்தான் கொண்டு வர வேண்டும். அதைக்கூட நாம் நிரம்பவும் ஜாக்கிரதையாகத்தான் செய்ய வேண்டும். அதுவும் அபாயகரமானது தான். அவளை இங்கே கொண்டு வராமல், பட்டணத்திலேயே எங்கேயாவது மறைத்து வைத்துக் கொள்வதென்றால், அது வெகு சுலபமான காரியம். அப்படிச்