பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

மாயா விநோதப் பரதேசி

தந்திகள் கொடுத்து விடுங்கள். எப்படி என்றால், வடிவாம்பாள் மாதவிடாய் ஆகிவிட்டதால் நிச்சயதார்த்தம் ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது என்றும், மறுதேதி சில தினங்களில் தெரிவிக்கப்படும் என்றும் செய்தி அனுப்பிவிடுங்கள். அதற்குள் நான் காரியத்தை முடித்துக் கொண்டு வந்துவிடுகிறேன்.

மாசிலாமணி:- சரி. இது நல்ல யோசனைதான். இரண்டு வேலைகளையும் முதலில் முடியும். மிகுதி வேலையைப் பற்றி நாம் நடக்க நடக்க யோசித்துக் கொள்வோம்.

இ. சேர்வைகாரன்:- சரி. அப்படியே முடிக்கிறேன். எனக்கு நேரமாகிறது. இன்னும் அரை மணி நேரத்தில் தஞ்சாவூருக்கு ஒரு ரயில் போகிறது. நான் அதிலேயே போய் போலீஸ் ஆபீசில் ஆக வேண்டியதை முடித்துக் கொண்டு வந்து விடுகிறேன். உத்தரவு கொடுங்கள்.

மாசிலாமணி:- சரி, போய் வாரும்.

உடனே இடும்பன் சேர்வைகாரன் விசிப்பலகையை இழுத்துப் போட்டு, அதன்மேல் ஏறி, சுவரின் திறப்பின் வழியாக நுழைந்து அப்பால் போய்விட்டான்.

4-வது அதிகாரம்
பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை

மாசிலாமணியும் இடும்பன் சேர்வைகாரனும் உரையாடிக் கொண்டிருந்த தினமும், அதற்கு மறுதினமும் கழிந்தன. மூன்றாவது நாள் பிற்பகல் மூன்று மணி நேரம் இருக்கலாம். மன்னார்குடி சீமான் வேலாயுதம் பிள்ளையினது மாளிகையின் மேன் மாடத்தில் விரிக்கப்பட்டிருந்த வழுவழுப்பான ஒரு பிரப்பம் பாயின் மீது நமது மாது சிரோன்மணியான வடிவாம்பாள் தனிமையில் வீற்றிருந்தாள். அன்றைய தினம் காலையில் அவளது மாமி திரிபுரசுந்தரி அம்மாள் அணிந்திருந்த விலை உயர்ந்த ஒரு பட்டுச்சேலை ஆணியில் மாட்டிக் கிழிபட்டுப் போனது. ஆகையால், அன்றைய தினப்படி