பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

மாயா விநோதப் பரதேசி

அவர்களுடைய தாட்சணியத்துக்காக, நாம் நம்மைத் திருத்திக் கொள்ள முடியுமா? எத்தனையோ யுகம் யுகமாக இருந்து அழியாப் புகழ்பெற்று வரும் நம்முடைய நாட்டின் ஸ்திரீ தர்மங்களை நாம் கைவிடவும் முடியாது. அப்படிக் கைவிட்டால், இந்த நாடு வெகு சீக்கிரம் சீர்கெட்டு அழிந்து போவது நிச்சயம்” என்றாள்.

கண்ணப்பா:- நீ சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனாலும் இப்போது நம்முடைய நாடு இருக்கும் நிலைமையைப் பார்த்தால், வெகு சீக்கிரத்தில் நம்முடைய மனிதர்களுடைய நடையுடை பாவனைகளில் பெருத்த பெருத்த மாறுபாடுகள் உண்டாகிவிடும் என்ற ஒரு நிச்சயம் என் மனசில் உண்டாகிவிட்டது. இங்கிலீஷ் படிப்பு நம்முடைய நாட்டில் பரவுவது வருஷத்துக்கு வருஷம் அதிகப்பட்டுக் கொண்டே போகிறது. அந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய பெண் மக்களுக்குள்ளும் நுழையத் தலைப்பட்டுவிட்டது. இங்கிலீஷ் படித்தவர்களுள் பெரும்பாலோர் தம்முடைய பழைய தர்மங்களை எல்லாம் அடியோடு மறந்து புது மனிதர்களாக மாறிப் போயிருக்கின்றனர். முக்கியமாக நம்முடைய நாட்டில் உள்ள பிராமணர்களை எடுத்துக் கொள்வோம். மற்ற ஜாதியாரைவிட, பிராம்மணர்களே இங்கிலீஷ் பாஷையை அதிகமாக நாடுகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு அதனால் பிழைப்புக்கு நல்ல மார்க்கம் ஏற்படுகிறதென்று அதை நாடுகிறார்கள். ஓர் ஊரில் பிராம்மணர் வீடுகள் இருபது இருந்தால் அத்தனை வீட்டுப் பிள்ளைகளும் இப்போது இங்கிலீஷ் பாஷை கற்றுக் கொள்ளுகிறதையே வேதபாராயணம் செய்வதைவிட அதிக சிரத்தையாகச் செய்யத் தலைப்படுகிறார்கள். அநேகமாய் எல்லோரும் ஏதாவது உத்தியோகம் சம்பாதித்துக் கொண்டு வெளியூர்களுக்குப் போய் விடுகிறார்கள். போன தலைமுறையில் இருந்த பிராம்மன அக்கிரஹாரங்கள் எல்லாம் இந்தத் தலைமுறையில் பாழ்த்துக் குட்டிச்சுவர்களாய் நிற்கின்றன. நம்முடைய வேத சாஸ்திரங்களைப் படிப்பதெல்லாம் அடியோடு இல்லாமல் போய்விட்டது. வைதிகப் பிராம்மணர்களுடைய வயிற்றில் உதித்த கீழ்க்கடைகள் எல்லாம் இங்கிலீஷ் பாஷையில் தேறி பெரிய பெரிய