பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

மாயா விநோதப் பரதேசி

சச்சர்வுகளிலுமே போய் முடிகிறது. எத்தனை கதைகள் படித்தாலும், சரித்திரங்கள் படித்தாலும், புராணங்கள் படித்தாலும், எல்லாவற்றிற்குள்ளும் நிற்கும் சாராம்சம் ஒரே மாதிரியானது தானே. அதுவுமன்றி வெள்ளைக்காரர்கள் சுமார் 2000 வருஷங்களுக்கு முன்பு நாகரிகமற்ற காட்டு மனிதர்களாய் இருந்ததாக அவர்களுடைய சரித்திரங்களே சொல்லுகின்றன. அப்போது அவர்களிடம் ராஜாங்க நிர்வாக முறைகளும் சட்டங்களும் நீதி ஸ்தலங்களும் இருந்ததில்லை. அவைகள் படிப்படியாக வளர்ந்து தற்கால நிலைமையை எப்படி அடைந்ததென்ற விவரமெல்லாம் அவர்களுடைய தேச சரித்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறதாம். அப்படிப்பட்ட அபிவிருத்தியைக் காட்டிய தேசசரித்திரம் நம்மிடம் இல்லையாம். அதனால் நாம் நாகரிகமற்றவர்களாம். இந்த மாதிரி ஒரு புஸ்தகம் சொல்லுகிறது. அவர்களுடைய தேசத்தில் சமீபகாலம் வரையில் ஒன்றும் இல்லாமல் இருந்து பிறகு எல்லாம் வளர்ந்து வந்திருப்பதால், அவர்களுடைய தேச சரித்திரத்தில் அந்த விவரம் இருப்பது சகஜமே. நம்முடைய தேசம் எத்தனையோ யுகங்களுக்கு முன்பே சகலமான துறைகளிலும் பரிபூர்ணமான நிலைமையை அடைந்து, அதற்குமேல் போக முடியாது என்ற ஓர் எல்லை முடிவை அடைந்து அது சர்வ சாதாரணமான பழைய சங்கதியாக இருந்து வருகிறது. சகலமான ராஜாங்க நீதிகளும், அரசன், பிரஜைகள், தகப்பன், தாய், பிள்ளை, சகோதரன், மருமகள் முதலிய ஒவ்வொரு வகுப்பினரும் எவ்வித தர்மத்தைக் கடைப்பிடித்து, மற்றவரிடம் எப்படி ஒழுக வேண்டும் என்ற சகலமான முறைகளும் நீதிகளும் பரிபக்குவ நிலைமை அடைந்து கற்கண்டுக் கட்டி போலத் திரட்டிவைக்கப்பட்டிருக்கின்றன. நம்முடைய இராமாயணம், பாரதம் ஆகிய இரண்டு பெரிய பண்டக சாலைகளில் புகுந்து பார்த்தால், மனிதர் தெரிந்து கொள்ளக் கூடிய சகலமான நீதிகளும் தர்மங்களும் அவற்றில் அடங்கி இருக்கின்றன. வேதாந்த விஷயமாகப் பார்க்க வேண்டுமானால் பகவத்கீதை என்ன, உபநிஷத்துகள் என்ன இவைகளில் கண்டுள்ள முடிவைவிட அதிகமாக மனிதர் எட்ட முடியாது. மனிதர் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கங்கள்