பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

169

ஜீவாத்மாக்களும் ஒரே நிலைமையான பக்குவ நிலைமையில் இருக்கிறதென்று நாம் சொல்ல முடியாது. ஒன்று அபாரமான முதிர்ச்சி அடைந்ததாக இருக்கிறது. ஒன்று அக்ளுான நிலைமையில் இருக்கிறது. எல்லோரும் கல்விகற்றுக் கொண்டதனாலேயே எல்லோரும் சமமான முதிர்ச்சி அடைந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. மனப்பக்குவம் அடைந்தவன் ஒருவனும் பெரிய பரீட்சையில் தேறுகிறான். பக்குவம் அடையாத ஒருவனும் அதே பரீட்சையில் தேறுகிறான். முன்னவன் நீதிநெறி வழுவாதவனாகவும் மனோதிடம் உடையவனாகவும் இருப்பான். பின்னவன் நாஸ்திகனாகவும் துன்மார்க்கங்களில் அஞ்சாது பிரவர்த்திப்பவனாகவும் நடத்தைத் தூய்மை அற்றவனாகவும் இருப்பான். ஆகையால் மனிதனுடைய ஜீவாத்மாவின் பிரம்ம ஞானத் தேர்ச்சிக்கும், மனிதன் இங்கிலாந்து தேசத்துச் சரித்திரத்தைக் குருட்டு நெட்டுருப் போட்டுப் பரீட்சையில் தேறுவதற்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே கிடையாது. நம்முடைய தேசத்தவர் கடவுளை அடைவதற்குக் கடவுளுடைய துணையை அடிப்படையாக வைத்துக் கொண்டிருந்தாலும், முதிர்ச்சி அடையாத ஒரு ஜீவாத்மா தன்னோடுகூட இருக்கும் முதிர்ச்சி அடைந்த இன்னொரு ஜீவாத்மாவைப் பணிந்து அதன் துணையைக் கொண்டே வழி தெரிந்து முன்னுக்குச் சென்று முதிர்ச்சியடைய வேண்டும் என நிர்ணயித்திருக்கிறார்கள். ஒரு ஸ்திரீ ஒரு புருஷனை மணந்து கொண்டால், அந்த புருஷனுக்குள் இருக்கும் ஜீவாத்மா லிதிரீக்குள்ளிருக்கும் ஜீவாத்மாவைவிட அதிக முதிர்ச்சி அடைந்திருப்பதாகவே பொதுவாக நம்முடைய பெரியோர்கள் கருதி பெரியதை அடுத்துச் சிறியது முன்னேற்றம் அடைந்து உய்ய வேண்டும் என்ற சுலபமான வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதுபோலவே, குருவுக்கு சிஷ்யர்களும், அரசனுக்குப் பிரஜைகளும், பெற்றோருக்குப் பிள்ளைகளும் அடங்கிப் பணிவாக நடக்க வேண்டும். இதுவே மனித தர்மம். இதனால் சாசுவதமான ஜீவாத்மா மறுமையில் முதிர்ச்சி அடைவது முக்கியமான நோக்கம். அதுவுமன்றி இகலோகத்தில் ராஜ்ய பாரத்திலும், குடும்பங்களிலும், ஒற்றுமை, இன்பம், க்ஷேமம்,