பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

மாயா விநோதப் பரதேசி

தன்றி, இருபுறங்களிலும் அவனது உருண்டைக் கன்னங்களில் தண்ணீர்ச் சுழல்கள் போன்ற வசீகரமான குழிவுகளை உண்டாக்கியது. உயர்ந்த தலையும், விசாலமான நெற்றியும், பரந்த உருண்டை முகமும், கருத்தடர்ந்த புருவவிற்களும், புத்திக் கூர்மையையும் தீவிர விவேகத்தையும் மின்னலைப் போலப் பளிச்பளிச் என்று வீசி வெளிப்படுத்தும் கருங் கண்களும், முத்துக்கள் போன்ற நிர்மலமான அழகிய பற்களும், பக்குவகால மடந்தையரின் அதரங்கள் போலக் கனிந்து சிவந்து மிருதுவாக இருந்த இதழ்களும், அவனது செவிகளில் நட்சத்திரச் சுடர்கள் போல ஒளி வீசிய வைரக் கடுக்கன்களும் ஒன்றன் அழகை ஒன்று பதினாயிரம் மடங்கு பெருக்கிக் காட்டி, அவனது முகத்திற்கு ஒருவித அபூர்வ வசீகர சக்தியைக் கொடுத்துக் கொண்டிருந்தன. அந்த மன்மதபுருஷன் ஏதாகிலும் பேச வேண்டும் என்று மனதில் நினைக்கும் போதே, அவனது சுந்தரவதனத்தில் ஒருவித மந்தஹாலமும், மலர்ச்சியும் முன்னாகத் தோன்றி நின்று, அவனது மனத்தில் எப்போதும் நற்குணமும் அந்தமும் இயற்கையிலேயே பரிபூரணமாக நிறைந்திருக்கின்றன என்பதைத் தெள்ளிதில் காட்டின. அவனது பார்வை கம்பீரப் பார்வை யாகவும், அவனது வார்த்தைகள் அற்பமான விஷயங்களில் கலக்காமல், பெரும் போக்காகவும், கண்ணியமாகவும், மிருதுத் தன்மை நிறைந்ததாகவும், அயலார் விஷயத்தில் ஜீவ காருண்யம், வாத்தியம் முதலிய அருங்குணங்கள் த்வனிப்பனவாகவும் இருந்தன. அவனது சிரத்தில் கரும்பட்டுப் போலத் தோன்றிக் கருத்தடர்ந்து நீண்டு நெளிந்திருந்த வசீகரமான தலை மயிரை அவன் ஒரு சிறிய தேங்காய் அளவு முடிந்து பின் கழுத்தில் விட்டிருந்தது, ஒரு பக்கமாகச் சாய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவன் அன்றைய தினமே கூடிவரம் செய்து கொண்டிருந்தவன் ஆகையில், அவனது நடுத்தலையில் குறுக்காகவும் வளைவாகவும் வெட்டிவிடப்பட்டிருந்த கன்றுக்குடுமி தோட்டங்களில் காணப்படும் ஒழுங்கான மருதாணி வேலியைப் போலக் காணப்பட்டது. நெற்றியின் நடுவிற்குச் சிறிது இறக்கமாக, ஒரு தேத்தாங்கொட்டை அகலத்தில் சந்தனப்பொட்டு வைக்கப்பட்டிருந்தது. அவன் தனது இடுப்பில்