பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

185

படிப்பிலேயே பூர்த்தியாகச் சென்று கொண்டிருந்தது. ஆகையால், சங்கீதம் அவளது மனதை அவ்வளவாகக் கவரவில்லை.

இத்தகைய குணாதிசயங்கள் வாய்ந்தவளாக நமது மனோன்மணியம்மாள் அலுத்து, முன் விவரிக்கப்பட்டபடி ஸொகுலான கட்டில் மெத்தைகளின் மேல் சாய்ந்து, புஸ்தகமும் கையுமாக உறங்கியும், இடையிடையில் கண்களை விழித்துப் பார்த்துக் கொண்டும் இருக்க, அந்த விடுதியின் வாசலில் உட்கார்ந்திருந்த வேலைக்காரி ஓசை செய்யாமல் உள்ளே வந்து அவளுக்கெதிரில் நிற்காமல் மறைவாக நின்று, “அம்மா! அம்மா!” என்று நிரம்பவும் பணிவாக அவளைக் கூப்பிட்டாள்.

அதைக் கேட்ட மனோன்மணி, “யார் அது? சண்பகம்! நான் கூப்பிடாவிட்டால் வரவேண்டாம் என்று சொல்லி இருந்தேனே! ஏன் வந்தாய்” என்றாள்.

அதைக் கேட்ட வேலைக்காரி, “வாசலில் யாரோ மனிதர் வந்திருக்கிறார்களாம். அவர்கள் உங்களோடு பேச வேண்டுமாம். டலாயத்து வந்து சங்கதியைச் சொல்லிவிட்டு இதோ வாசலில் நிற்கிறான்” என அந்தச் சிங்கதியைச் சொல்லி, “உங்களுடைய உத்தரவைக் கேட்டுக் கொண்டு போகலாம் என்று வந்தேன். வேறொன்றும் இல்லை” என்று மிகுந்த பணிவோடு கூறினாள்.

அதைக் கேட்ட மனோன்மணி நிச்சலனமாக இருந்தபடியே பேசத் தொடங்கி, “யாரோ வந்தால், அதை என்னிடம் ஏன் சொல்ல வேண்டும்? அப்பா கச்சேரிக்குப் போயிருக்கிறார்கள் என்று சொல்லி அனுப்புகிறது தானே? எனக்குத் திங்கள் கிழமை தினம் பரீட்சை. ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு விலை மதிப்பற்றதாக இருக்கிறது. இந்தச் சமயத்தில் நீங்கள் வந்து ஏன் இடையூறு செய்கிறீர்கள்?” என்றாள்.

வேலைக்காரி, “அவர்கள் பெரிய எஜமானைப் பார்ப்பதற்காக வந்தவர்கள் அல்லவாம்; உங்களைப் பார்த்து விட்டுப் போவதற்காக வந்திருக்கிறார்களாம்?” என்றாள். - -

மனோன்மணி சிறிது வியப்படைந்து, “என்னைப் பார்ப்பதற்காகவா வந்திருக்கிறார்களாம்? எனக்குப் பழக்கமானவர்கள் யார் இருக்கிறார்கள்? அவர்கள் ஆண்பிள்ளையா பெண்பிள்ளையா?