பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

மாயா விநோதப் பரதேசி

தரையை நன்றாக மெழுகிக் கண்ணாடி போல வைத்திருப்போம். அவ்விடத்தில் உட்காருவது குளிர்ச்சியாகவும் சுகமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். தரையில் கை கால்களுக்கு வேண்டிய அளவு இடம் இருக்கும். ஒருவர் உட்கார்ந்த இடத்தில் மற்றவர் உட்கார வேண்டும் என்பதில்லை. நாற்காலியின் விஷயமோ அப்படிப்பட்டதல்ல. அதன் இடம் சொற்பமானது. கால்களை எப்போதும் தொங்கவிட்டுக் கொண்டே உட்கார்ந்திருப்பதால், உடம்பு முழுதிலும் இரத்தம் சமமாக ஓடாமல் சில இடங்களில் இரத்தப் போக்கு தடைப்பட்டு வியாதிகளை உண்டாக்குகிறது. உடம்பு எப்போதும் மரத்தில் உராய்ந்து கொண்டே இருப்பதால் தோலின் மிருதுத்தன்மை போய் அது காய்த்துப் போகிறது. தரையில் உட்காரும் போது உடம்புக்கு ஏற்படும் செளகரியம் நாற்காலியில் உட்காரும் போது ஏற்படுகிறது இல்லை. நாற்காலியில் வியாதியஸ்தரும் உட்காருகிறார்கள். அமிதமான சூடுள்ளவரும் உட்காருகிறார்கள். ஆண் பிள்ளைகளும் உட்காருகிறார்கள், பெண் பிள்ளைகளும் உட்காருகிறார்கள். அதனால் ஒரு மனிதருடைய வியாதி மற்றவருக்குப் பரவுகிறதன்றி, ஒருவரை ஒருவர் தொடக்கூடாது என்னும் பயிர்ப்பென்ற குணம் அதனால் குறைந்து கொண்டே வருகிறதற்கு அது ஒர் ஏதுவாக இருக்கிறது. இந்தக் காரணங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்க, இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது.

அதாவது நாம் தரையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது பெரியவர்கள் யாராவது வந்தாலும், அவர்களை அவமரியாதைப் படுத்துவதாகாது. நாம் நாற்காலியிலேயே உட்கார்ந்து பழகி விட்டால், நாம் பணிவாக நடந்து கொள்ள வேண்டிய மனிதர்களுக்கு எதிரிலும் நாம் நாற்காலியில் உட்கார்ந்து கொள்ள நேரும். அதன் பிறகு எல்லோரும் சமமாகப் போய்விடும். புருஷன், மாமனார், மாமியார், வயதான பெரியவர்கள் முதலியவர்களுக்குச் சமமாக நாம் ஒருபோதும் உட்காரக் கூடாது. ஆகையால் அதற்குத் தரைதான் நிரம்பவும் அனுகூலமானது, அதுவுமன்றி நாற்காலி முதலிய வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க, நாம் நம்முடைய வீட்டுத் தரையைச் சுத்தமாகவும் வழுவழுப்பாகவும் வைத்துக் கொள்ளாமல் அசட்டையாக விட்டுவிட