பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

207

நேருகிறது. அதனால் வியாதிகள் உண்டாக ஏது ஏற்படுகிறது. ஆனால் உங்கள் தகப்பனார் பெரிய உத்தியோகம் வகிப்பதால், வெள்ளைக்காரர்கள் இங்கே வந்து போவதற்கு அனுகூலமாக நீங்கள் நாற்காலி முதலியவைகள் போட்டு வைத்திருப்பது அவசியந்தான். அதனால் ஏற்படும் தீங்குகளைக் கவனிக்காமல் கெளரவத்தைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியமே. வெளியூர்களிலும் கிராமங்களிலும் உள்ள எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் நாற்காலியில் உட்காரும் பழக்கம் அநாவசியமானதே. அதனால் பல தீமைகள் உண்டாகின்றன. நீங்கள் பி.ஏ. பரீட்சைக்குப் படிப்பதால், இதெல்லாம் உங்களுக்குத் தெரியாததல்ல. நீங்கள் நிரம்பவும் நாகரிகம் வாய்ந்தவர்கள். ஆதலால் உங்கள் வீட்டுத் தரையை நீங்கள் அசுத்தமாக வைத்திருக்கமாட்டீர்கள் ஆகையால், கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போகும் வரையில் நான் தரையில் உட்காருவதால், என் புடவை அதிகமாய்க் கெட்டுப் போகாது. முக்கியமாக இன்னொரு விஷயம் இருக்கிறது. அதோ வந்து உட்கார்ந்திருப்பது என்னுடைய எஜமானர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர்களுக்கு எதிரில் நாங்கள் தரையில்கூட உட்கார்ந்திருப்பது வழக்கமில்லை. அப்படி இருக்க, அவர்களுக் கெதிரில் நாற்காலியில் உட்காருவதென்றால், அதைப் போல ஒழுக்கத் தவறான காரியம் வேறு ஒன்றும் இராதென்று நினைக்கிறேன். ஆகையால், நான் உங்களுடைய பிரியப்படி நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளாததைப் பற்றி நீங்கள் வருத்தப் படக்கூடாது. மனிதர் எங்கே உட்கார்ந்தால் என்ன? அதனால் தானா மனிதருக்குப் பெருமையும் சிறுமையும் ஏற்படப் போகிறது? அடக்கம் அமரருள் உய்க்கும் என்று நம்முடைய பெரியோர்கள் கண்டுபிடித்து அதை சிறந்த தருமமாகக் கடைப்பிடித்து வந்திருக்க, அன்னிய நாட்டார் வேறுவிதமாக நடந்து கொள்ளுகிறார்கள் என்று நாம் அதைப் போல மாறுபட்டுப் போவது நாம் சுயமதிப்பும் ஆழ்ந்த விவேகமும் இல்லாத குழந்தைகள் என்று நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்வது போலாகும் அல்லவா. சாரமற்ற சருகு ஆகாயத்தில் பறக்கிறது. கனமான தங்கம் வெள்ளி முதலியவைகள் எல்லாம் பள்ளத்தில்