பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

மாயா விநோதப் பரதேசி

லேயே புத்தியைச் செலுத்துகிறார்கள். இன்னம் அவர்கள் பணிவாக நடத்தல், உண்மை பேசுதல், உழைத்து வேலை செய்தல், சன்மார்க்கங்களில் நடத்தல் முதலிய காரியங்களில் அவர்களைப் பழக்கப் பெற்றோர் முயல்கிறார்கள். அவைகள் எல்லாம் பையன்களுக்குப் பெருத்த துன்பமாகத் தோன்றுகின்றன. எவ்விதமான கட்டுப்பாட்டுக்கும் அடங்காமல் தம்முடைய இச்சைப்படி நடந்து கொள்வதே அவர்களுக்கு சுகமாகத் தோன்றுகிறது. பையன்கள்தான் இப்படி என்றால், இன்னம் அதிக வயசான யெளவனப் பருவத்தினரை எடுத்துக் கொள்வோம். அவர்களில் எத்தனை பேர் அன்னிய மாதர், தாசிகள், வேசைகள் முதலியவர்களிடம் சிநேகமாக இருப்பதே சுவர்க்க போகம் என்று எண்ணி மதியிழந்து மானம் இழந்து கெட்டழிகிறார்கள். பெற்றோர், பெரியோர், உற்றார், உறவினர் முதலியோர் சொல்லும் நல்ல புத்தி எல்லாம் அவர்களுக்குக் கன்ன கடூரமாகத் தோன்றுகிறது. அவர்களுடைய நன்மையை நாடி உண்மையைச் சொல்லுகிறவர்கள் எல்லோரும் அவர்களுக்குச் சத்துருக்கள் போலத் தோன்றுகிறார்கள். யெளவனப் பருவத்தினருள் மேற்சொன்னபடி துர்ப்புத்தி பிடித்து அலைவோரைத் தவிர, புதிதாகக் கலியானம் செய்து கொள்ளும் சிறியவர்கள் தம்முடைய புதிய மனைவியின் மையலில் அழ்ந்து மதியிழந்து அவர்களையே தெய்வமாக மதித்து அவர்களுக்கு அடிமையாகி, அதுவரையில் தங்களைக் காப்பாற்றிய தாய் தந்தையரை அசட்டை செய்து, அவர்களுடைய பேச்சைக் கேளாது அவர்களைப் பட்டினி போட்டு அடித்துத் துரத்தி விடுகிறதை நாம் எத்தனையோ இடங்களில் பார்க்கவில்லையா? இப்படிப்பட்ட புதிய மோகமும் பித்தமும் எப்போதும் நீடித்து நிற்கின்றனவா? சில வருஷகாலத்தில் அந்த மோகமும், மன உக்கிரமும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகின்றன. அதற்கு முன் தெய்வம் போல மதித்து வணங்கப்பட்ட ஸ்திரீகள் கொஞ்ச காலத்தில் வாடிப்போகும் புஷ்பங்கள் போலக் காலால் மிதித்து அவமதிக்கப்படுகிறார்கள். இப்படி மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரையில் உள்ள ஒவ்வொரு பருவத்திலும் அவனுடைய மனசை மயக்குவதற்கு ஒவ்வொரு புது விஷயம்