பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

மாயாவிநோதப் பரதேசி

வேண்டா வெறுப்பாக இன்று வந்தாயே! இந்த இடம் எப்படி இருக்கிறது பார்த்தாயா? என்றான்.

அதைக் கேட்ட கந்தசாமி என்ற கட்டழகன் மந்தஹாலம் தவழ்ந்த முகத்தோடு சந்தோஷமாகப் பேசத் தொடங்கி, “ஆம்: வாஸ்தவம் தான். இதுவரையில் இந்த இடத்தை நாம் பார்க்காமல் போனோமே என்ற விசனம் எனக்கும் உண்டாகிறது. ஆனால் என் மனசில் ஒரு சந்தேகமும் பிறக்கிறது. நம்முடைய பெண் மக்கள் இருந்து படிப்பதற்கு இவ்வளவு பெரிய பட்டனத்தில் ஊருக்குள்ளாகவே இந்தத் துரைத்தனத்தாருக்கு ஒரு நல்ல இடம் அகப்படவில்லையா? இப்படிப்பட்ட தனிக்காட்டில், இரண்டு பெரிய ஸ்மசானங்களுக்கு நடுவில்தானா கொண்டுவந்து இவ்வளவு முக்கியமான கலாசாலையை ஸ்தாபிக்க வேண்டும்? இன்று பெளர்ணமி ஆதலால், நிலவு பால் போல இருக்கிறது. எல்லாம் பார்ப்பதற்கு அற்புதமாகவும் மனசை மோகிக்கச் செய்வதாகவும் இருக்கிறது. இருளே மயமாக இருக்கும் அமாவாசை காலமாக இருந்தால், இந்த மாளிகைகளுக்குள்ளிருக்கும் நமது பெண்மணிகள் இராக்காலங்களில் வெளியில் தலையை நீட்டவும் துணிவார்களா? அதுவுமன்றி, இரண்டு திக்குகளில் ஸ்மசானங்கள் இருப்பது நம் குழந்தைகளுக்குத் தெரியாமல் இருக்காது. அப்படி இருக்க, எப்படிப்பட்ட துணிகரமான நெஞ்சுடையவர்களும் இருளில் இந்த இடத்தில் இருக்க அஞ்சுவார்கள் என்றே நினைக்கிறேன். வெள்ளைக்கார துரைத்தனத்தார் முட்டாள்கள் அல்ல. நான் சொன்ன இந்த ஆட்சேபம் அவர்களுடைய மனசில் பட்டிருக்காதென்று நாம் நினைப்பதற்கில்லை. வேறே ஏதாவது முக்கியமான நோக்கத்தோடு தான் அவர்கள் இந்த இரண்டு ஸ்தாபனங்களையும் இவ்விடத்தில் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் அவர்கள் இன்னொரு காரியம் செய்திருந்தால், அது ஒருவிதத்தில் நலமாக இருந்திருக்கும். இந்தக் கலாசாலைக் கட்டிடத்தின் முன் பக்கத்திலும் அதைச்சுற்றி நாற்புறங்களிலும், இப்போது பொட்டல் வெளியாயிருக்கும் இடத்தில் ஏராளமான மரங்களையும் பூச்செடிகளையும் அமைத்து அபிவிருத்தி செய்து, அதை ஒரு பெருத்த பூஞ்சோலையாகச் செய்து இடையிடையில் விளக்கு ஸ்தம்பங்களை நட்டு இருள் காலங்களில் விளக்குகளைக்