பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

மாயா விநோதப் பரதேசி

எத்தனையோ மனிதருக்குப் பாம்புகடிக்கு விபூதி போட்டு சொஸ்தப்படுத்தி இருக்கிறான். மனிதன் செத்துப் போய்விட்டால் கூட அவன் அந்தப் பிணத்தை எழுப்பி உட்காரவைத்துப் பேசச் செய்வான். வேறே யாரையும் கூப்பிட்டு அநாவசியமாகப் பொழுதைப் போக்காமல் உடனே ஒட்டமாக ஒர் ஆளை அவனிடம் முடுக்குங்கள். அவன் ஒருத்தன் வந்தால், அதுவே போதுமானது” என்றான்.

இன்னொருவன், “அவர்கள் எல்லோரும் வருகிற வரையில், உயிர் நிற்குமோ என்னவோ. அதெல்லாம் வேண்டாம். சிறியா நங்கைச் செடியைக் கொண்டு வந்து அதோடு கொஞ்சம் மிளகை வைத்து அரைத்து உடனே உள்ளுக்குக் கொடுங்கள். கால் நாழிகையில் சாமியார் தூங்கி விழிப்பவர் போல எழுந்து உட்கார்ந்து கொள்வார். இது நிச்சயம்” என்றான்.

இன்னொருவன், “நாம் நினைத்த மாத்திரத்தில் சிறியாநங்கை அகப்பட்டு விடுமா. அது அபூர்வமான மூலிகையல்லவா. யாராவது தோட்டங்களில் வைத்து வளர்த்திருந்தால்தான், அது எளிதில் கிடைக்கும். அது இப்போது எங்கே அகப்படப் போகிறது; அது வேண்டாம். வெப்பாலை குத்துப்பாலை என்று ஒரு செடி இருக்கிறது. அது சாதாரணமாக நம்முடைய ஆற்றோரங்களில் அகப்படும். அதன் இலையையும், மிளகையும் சேர்த்துக் கொஞ்சம் தண்ணி விட்டரைத்து உடனே கொடுங்கள். அதுவே போதுமானது” என்றான்.

வேறொருவன், “அந்தப் பச்சிலைக்குக் கூட நாம் அதிக தூரம் போக வேண்டும். அது வேண்டாம். குப்பமேனித்தழை, அப்பக் கோவத்தழை, மிளகு மூன்றையும் அரைத்துக் கொடுங்கள். இந்த மூலிகைகள் அநேகமாய் இந்த பங்களாவிலேயே கிடைக்கலாம்: கிடைக்காவிட்டால், விழும்பிப் பழமும் பச்சைவெண்ணெயும் சேர்த்து அரைத்துக் கொடுக்கலாம்” என்றான்.

அவர்களது சொற்களை எல்லாம் கேட்ட சப் இன்ஸ்பெக்டர், இப்படி நீங்கள் எல்லோரும் வாயில் வந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டே போனால் எதைச் செய்கிறது என்பதே தோன்றாமல் பிரமிப்பு உண்டாகிவிடும். நீங்கள் சொல்லும் சாமான்கள் எல்லாம்