பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

275

ஆள்களை அனுப்பும்படி எஜமானியம்மாள் சொன்னார்கள். கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான், நான் சேவகர்களிடம் அந்தச் செய்தியைத் தெரிவித்து ஆள்களை அனுப்பச் சொல்லிவிட்டு வந்தேன். நல்ல வேளையாக அதற்குள் நீங்களே வந்து விட்டீர்கள்” என்றாள்.

அவள் கூறிய உருக்கமான சொற்களைக் கேட்கவே, வந்த இருவர்களினது இருதயமும் துக்கத்தினால் பொங்கிப் படீரென்று வெடித்து விடுமோ என்ற அஞ்சத்தகுந்த நிலைமையை அடைந்துவிட்டது. இருவரும், “ஆ! தெய்வமே! இப்படியும் சோதனை செய்வாயா!’ என்று வாய்விட்டுக் கதறி அங்கலாய்த்துக் கொண்டனர். இருவரது தேகமும் தள்ளாடிக் கீழே வீழ்ந்து விடுமோ என்று தோன்றக்கூடிய நிலைமையை அடைந்தது. அவர்களுக்குத் தாம் என்ன மறுமொழி சொல்வதென்பதை அறியாது, அவர்கள் இருவரும் மெளன ரூபமாய் இருந்த கரைகாணாத பெருத்த துக்கசாகரத்தில் அழுந்திப் போய் வேதனையாகிய நூறாயிரம் முதலைகளால் அல்லல்படுத்தப் பெற்று நிற்க, உடனே வேலைக்காரி கதவண்டை மெதுவாகப் போய் அதை இரண்டொரு முறை தட்டி, “அம்மா! அம்மா! வடிவாம்பாள் அம்மாவும் அவர்களுடைய எஜமானரும் வந்திருக்கிறார்கள். கதவைத் திறவுங்கள்” என்று தணிவான குரலில் கூறினாள். அடுத்த நிமிஷத்தில் உட்புறத்தில் இருந்து ஒரு மிருதுவான குரல் உண்டாயிற்று, “அவர்களோடு இன்னம் வேறே யார் வந்திருக்கிறார்கள்?” என்று திகம்பர சாமியாருடைய மனைவி கேட்பதாகத் தெரிந்தது. உடனே வேலைக்காரி, “அவர்கள் இரண்டுபேர் மாத்திரம்தான் வந்திருக்கிறார்கள். வேறே யாருமில்லை” என்றாள்.

அடுத்த கூடிணத்தில் உள் தாழ்ப்பாள் மெதுவாக விலக்கப் பட்டது. கதவும் சிறிதளவு திறந்து கொண்டது.

தாங்கள் குலதெய்வம் போலவும் உயிருக்குயிராகவும் மதித்துள்ளதிகம்பர சாமியார் உயிருக்கு மன்றாடிக் கிடக்கும் சகிக்க