பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

மாயா விநோதப் பரதேசி

இயலாத பரம சங்கடக் காட்சியைத் தாம் அடுத்த கூடிணத்தில் கண்ணால் பார்க்க வேண்டுமே என்ற எண்ணம் உடனே அவர்கள் இருவரது மனதிலும் உதிக்கவே, அவர்களது துக்கமும் வேதனையும் மலைபோலப் பெருகி அவர்கள் இரண்டொரு நிமிஷ நேரம் தலை சுழன்று மயங்கி நிற்கும்படி செய்தது. அவர்களது தேகம் ஆகாயத்தில் பறப்பது போலத் தோன்றியதே அன்றி, தாங்கள் பூமியில் நடக்கிறோம் என்ற எண்ணமே அவர்களுக்குத் தோன்றவில்லை. “கதவு திறந்திருக்கிறது. உள்ளே போங்கள்” என்று வேலைக்காரி கூறிய வார்த்தையைக் கேட்ட பிறகே, அவர்களுக்குத் தங்களது சுயநினைவு சிறிதளவு தோன்றியது. அவர்கள் இருவரும் மடை திறந்து விட்டது போலத் தமது கண்களில் இருந்து வெள்ளமாகப் பெருகி வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் தமது வஸ்திரத் தலைப்பினால் துடைத்தபடி தமது முகத்தை மூடிக்கொண்டு மெதுவாக உள்ளே நுழைந்தனர். அவர்கள் மார்பில் இருந்து கிளம்பிய துக்கப் பெருக்கை அடக்க இயலாது அவர்கள் இருவரும் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினர். ஒரு பக்கத்தில் காணப்பட்ட கட்டிலின் மேல், சாமியார் முற்றிலும் பிரக்ஞையற்று பினம் போலப் படுத்திருந்த காட்சி, அவர்களது கண்ணில் படவே, அவர்களது மனதில் எழுந்த சொற்கள் வெளிப்படாமல் தொண்டையில் விக்கிப் போயின. கால்கள் தள்ளாடத் தொடங்கின; உடம்பு கை முதலிய அங்கங்கள் எல்லாம் வெட வெடவென்று நடுங்கிப் பதறுகின்றன. இருவரும் கன்றைப்பிரிந்து கூடிய பசுவைப் போல ஒலமிட்டு அலறத் தொடங்கி, “ஐயோ! தெய்வமே! என்ன காரியம் செய்து விட்டாய்! எங்களுக்கெல்லாம் உயிர்த் தெய்வமாக விளங்க வேண்டும் என்று அவதாரம் எடுத்து வந்து இதுவரையில் இருந்து திடீரென்று எங்களை எல்லாம் துக்கக்கடலில் ஆழ்த்திவிட்டுப் போய்விட நினைத்தாயா? ஐயோ! தெய்வமே! இது தருமமா இது உனக்கு அடுக்குமா?” என்று கூறித் தவித்தவர்களாய்க் கட்டிலண்டை பாய்ந்தனர். அவர்களது அபாரமான துயரப் பெருக்கில் அந்த அறையில் இன்னும் யார் யார் இருக்கிறார்கள் என்பதையாவது, தங்களுக்குக் கதவைத் திறந்துவிட்ட அவரது மனையாட்டியான சிவகாமியம்மாளை