பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

மாயா விநோதப் பரதேசி

வெளிப்பட்டார்கள் என்பதையே தெரிந்து கொள்ள முடிகிறதில்லை. “நான் நான்” என்று சொல்லிக் கொள்ளும் இந்த உடம்பில் என்னென்ன வஸ்துக்கள் சேர்ந்து, ரத்தம், மாமிலம் முதலிய ஏழுவகை தாதுக்களாக மாறியிருக்கின்றன என்பதும் தெரிகிறதில்லை. மண்ணில் இருந்து விளையும் அரிசியும், தண்ணிரில் இருந்து வரும் உப்பும், ஆகாயத்தில் இருக்கும் காற்றும், மரஞ்செடிகளில் இருந்து வரும் காய்கறிகளும் ஒன்றாகக் கூடி மனிதருடைய உடம்பாக மாறி இருக்கின்றன என்பது நமக்குப் பிரத்தியகூஷமாகத் தெரிகிறது. உலகத்தில் உள்ள அரிசி உப்பு முதலிய வஸ்துக்கள் எல்லாம் இப்படி ஒன்று கூடி வேறு புதுமையான ரூபமடைந்து நான் நான் என்று பாத்தியங் கொண்டாடிக் கொஞ்ச காலத்தில் அழிந்து போவதைத் தவிர நாம் வேறே எதையும் பார்க்க முடிகிறதில்லை. அவைகள் அழிந்து போவதைத் தடுக்கவும் நம்மால் ஆகிறதில்லை. நாம் பூலோகத்தில் உதிப்பதும், வளர்வதும், இறப்பதும் நம்முடைய சக்தியில் அடங்கிய காரியங்கள் அல்ல. அவை யாருடைய சக்தியினால், என்ன உத்தேசத்தோடு நடைபெறுகின்றன என்பதும் தெரிகிறதில்லை. இப்படி ஏற்படும் தேகம் நம்முடையது நம்முடையது என்று நாம் அறியாமையினால் உரிமை பாராட்டி, அது அழிந்து போவதைப்பற்றி விசனப்படுகிறோம். இப்படி நாம் விசனமாவது, கவலையாவது கொள்வதனால், ஏதாவது உபயோகம் உண்டா? மாயத்திரையின் மறைவில் இருந்து நடைபெறும் ஆக்ஞா சக்கரத்தின் வேலை நடந்துகொண்டுதான் போகிறது. மனிதன் விசனப்படுவதெல்லாம் வியர்த்தமாகத்தான் முடிகிறது. அவன் தனக்கு அருமையான இன்னொரு மனிதன் போய்விடுகிறானே என்று கண்ணிர் விட்டுக் கதறியழுவது நம்மைப் படைத்து ஆட்டிவைக்கிறவனுக்குத் தெரியாமலா இருக்கிறது? அப்படித் தெரிந்தும், அவன் அந்த மனிதனிடத்தில் இரக்கமாவது அனுகாபமாவது கொள்ளவில்லை என்று நினைப்பதுதான் பொருத்தமாகுமா? பிறகு எதனால் இப்படி நடக்கிறது? மனிதருக்கு மனிதர் உரிமை கொண்டாட யாதொரு பாத்தியமும் இல்லை. தனக்கு எவ்விதச் சம்பந்தமும் இல்லாத ஒரு வஸ்துவை