பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

285

கொள்ளுகிறதாகவே வைத்துக் கொள்வோம். அதன்பிறகு நான் சிரஞ்சீவியாகவே உலகத்தில் எப்போதும் இருந்து விடுவேனா. இப்போது எனக்கு ஏறக்குறைய ஐம்பது வயசாகிறது. எப்படியும், இன்னம் 15, 20 வருஷத்தில் நான் இந்த உலகை விட்டுப் போகவேண்டும் அல்லவா? அதன்பிறகு துஷ்ட நிக்கிரகம் சிஷ்டபரி பாலனம் எப்படி நடக்கப் போகிறதென்பது தான் தெரியவில்லை. இதே தொழிலை மேற்கொண்டு வாழையடி வாழையாகவும் காலுக்குக் காலாகவும் மனித கோடிகளை சிருஷ்டி செய்து அழித்துக் கொண்டிருக்கும் கடவுளுக்கு எனக்குப் பின்னால் என் அலுவலைச் செய்ய, வேறொருவன் வேண்டும் என்பது தெரியாமலா போய்விடும். இந்த உலகம் தோன்றிய நாள் முதலாய் ஒவ்வொரு தேசத்திலும், எத்தனையோ மகான்களும், தீரர்களும், அவதார புருஷர்களும் தோன்றி இருக்கிறார்களே. அவர்கள் எல்லோரும் சிரஞ்சீவியாகவா இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் எந்தப் பணியைச் செய்ய உத்தரவு பெற்று வந்தார்களோ அது முடிந்தவுடன் போய் விட்டார்கள் அல்லவா. மகா விஷ்ணுவின் அவதாரங்களாகிய ராமன், கிருஷ்ணன் முதலியவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்களுடைய சரித்திரங்களை இப்போது நாம் வாசித்துப் பார்த்தால், அவர்கள் பூலோகத்தைவிட்டு முடிவில் சுவர்க்கம் போனதாகச் சொல்லப்பட்டிருக்கும் இடத்தைப் படிக்கும்போது, நம்முடைய மனசில் உண்டாகும் துக்கத்திற்கும், ஏக்கத்திற்கும் அளவு சொல்ல முடியுமா? அவர்கள் பிறந்த பிறகு எத்தனையோ ஆயிரம் வருவடிங்களுக்குப் பின்னால் வந்துள்ள நாம் அவர்களுடைய தீரச் செயல்களையும் உத்தம குணங்களையும் புஸ்தகத்தில் படித்துவிட்டு, இவ்வளவு தவிப்புத் தவிக்கிறோமே. அவர்களுடைய காலத்திலேயே பிறந்து, அவர்களை நேரில் கண்ட மனிதருக்கு அவர்களை இழக்கும் விசனத்தினால் மனம் எவ்வளவு அதிகமாக உருகித் தவித்திருக்கும். ஈசுவராம்சம் பொருந்திய பெரிய பெரிய அவதார புருஷர்களே உலகில் நிலைத்து நிற்காமல் இறந்து மண்ணில் மறைந்து கனவில் கண்ட காட்சி போல் ஆகிவிட்டார்கள். அது நிற்க, இந்த உலகத்தில் மனிதன் பிறக்கும்போது அறிவு கல்வி முதலியவை