பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

291

மாயா விநோதப் பரதேசி

அனுபவிக்க முடியுமோ அவ்வளவையும் அனுபவிப்பதே முக்கியமான புருஷார்த்தம் என்ற கொள்கையை அனுபவத்தில் காட்டி வருவதால், நம்மவர்கள் மதிமயங்கி மறுமை என்று ஒன்று இருப்பதாகவே எண்ணாமலும், இம்மையின் அநித்தியத் தன்மையைக் கருதாமலும், மண் பெண் பொன்னாசைகளுக்கு அடிமை முறி எழுதிக் கொடுக்கத் தலைப்பட்டு விட்டார்கள். நம்முடைய முன்னோர்கள் கண்டுபிடித்துக் கையாடி வந்த தத்துவங்கள் எல்லாம் மறைந்து போய்விடுமோ என்று அஞ்சத் தகுந்த நிலைமை ஏற்பட்டுப் போயிருக்கிறது. உலகத்தில் துன்பங்களும் துயரங்களும் சண்டை சச்சரவுகளும் வரவரப் பெருகிக் கொண்டேதான் போகும் போலத் தோன்றுகிறது. என்னைப் போன்ற அற்பசக்தி வாய்ந்த மனிதர்கள் இருப்பதும் ஒன்றே இறப்பதும் ஒன்றே. கடவுளை நாம் சர்வ வல்லமை உள்ளவர் என்றும், எல்லாவற்றையும் அறிந்தவர் என்றும் நினைக்கிறோம். அவர் படைத்துள்ள சூரியன், சந்திரன், பூமி, நகூடித்திரங்கள், தண்ணீர், மனிதருடைய தேகம் முதலிய சகலமான ஜீவ ஜெந்துக்களையும் அண்டாண்ட பிரமாண்டங்களையும் நாம் கவனித்துப் பார்த்தால், இவை அனைத்தும் படைத்த கடவுள் நிகரற்ற சக்தியையும் அறிவையும் உடையவர் என்பது பிரத்தியகூஷமாகத் தெரிகிறது. ஆனால், அப்பேர்ப்பட்ட நிகரற்ற பரமாத்மாவின் சிருஷ்டியிலும் குற்றமும் குறைகளும் இருக்கின்றனவே என்பதுதான் ஆச்சரியத்திலும் பெருத்த ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாவற்றையும் படைத்துக் காத்து அழிக்கிறவர் கடவுள் என்ற விஷயம் மிருக பட்சி விருகூடிங்களுக்கு எல்லாம் தெரியுமோ தெரியாதோ அதை நாம் நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஆனால் மனிதரில் பெரும் பாலாருக்கு அந்த உண்மை தெரிந்திருக்கிறது. சிலருக்கு அதுகூட அவ்வளவு நன்றாகத் தெரியாமல் இருக்கிறது. நம்மை எல்லாம் படைத்த கடவுள், சிருஷ்டியின் உண்மை இப்படிப்பட்டது என்பதையும், எல்லோரையும் படைப்பது யார் என்பதையும், கடவுளுக்கும் மற்றவருக்கும் உள்ள சம்பந்தமும் இன்னது என்பதையும், மனிதர் முதலிய சகலமான ஜெத்துக்களும் எதற்காகப் பிறந்து பிறந்து இறக்கின்றனர் என்பதையும், ஒரு தரம் பிறந்து இறப்பவனுடைய உயிர் எங்கே போகிறது என்பதையும், அதன் முடிவென்ன என்பதையும், மனிதனிடத்தில் கடவுள்