பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

297

எப்படிச் சொல்லிக் கொள்ளுகிறார்கள்? இந்தச் செய்தியை உங்களிடம் யார் தெரிவித்தார்கள்? உங்கள் இரண்டு பேருடைய தாய் தகப்பன்மார்களும் இப்போது எங்கே இருக்கிறார்கள்? இதை எல்லாம் முதலில் சொல்லுங்கள்” என்றார்.

கண்ணப்பா, “ஜனங்களுக்கு அதிகமான விவரம் எதுவும் தெரியாது. என் தகப்பனாரும் தாயாரும் சாப்பாட்டை முடித்துக் கொண்டு பட்டணத்தில் நடக்கப் போகும் நிச்சயதார்த்தத்திற்கு சிலரை அழைத்துவிட்டு வருவதற்காக பூவனுாருக்குப் போனார்கள். நாங்கள் இப்போது புறப்பட்டு இங்கே வந்த வரையில் அவர்கள் திரும்பிவரவில்லை. நானும் வடிவாம்பாளும் மேன்மாடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஏதோ அலுவலாக வீட்டு வாசலுக்குப் போன வேலைக்காரி உடனே உள்ளே ஒடி வந்து தங்களை நாலைந்து பாம்புகள் கடித்து விட்டன என்றும், தாங்கள் பிரக்ஞையற்று மயங்கி விழுந்து கிடப்பதாகவும் ஜனங்கள் சொல்லிக்கொண்டு தாறுமாறாகத் தங்களுடைய ஜாகையை நோக்கி ஓடுகிறார்கள் என்று சொன்னாள். அதைக் கேட்ட உடனே எங்களுக்கு நம்பிக்கை உண்டாகவில்லை ஆனாலும், அத்தனை ஜனங்களும் சொல்லிக் கொண்டு போவதைப் பொய் என்று நினைக்கவும் மனம் இடங் கொடுக்கவில்லை. ஆகையால் உடனே புறப்பட்டு நானும் இவளும் நேராக வந்து சேர்ந்தோம். பங்களாவின் வாசலில் ஆயிரக்கணக்கில் ஜனங்களும் போலீசாரும் திரளாக இருக்கிறார்கள். எல்லோரும் தங்களைப்பற்றி நிரம்பவும் கவலையும் விசனமும் கொண்டு துடிதுடித்து நிற்கிறார்கள். அவர்கள் நிற்பதைக் கண்டு அவர்கள் சொன்னதைக் கேட்க, பாம்புகடித்ததென்பது நிஜமான செய்தி என்று ஊர்ஜிதப் படுத்திக்கொண்டு உள்ளே வந்தோம். இந்த அறைக்கு வெளியில் உட்கார்ந்திருக்கும் தங்களுடைய வேலைக்காரியும் அதை உறுதிப்படுத்தினாள். இதைத் தவிர உண்மையான விவரம் எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை. வடிவாம்பாளின் தாய் தகப்பன்மார்கள் அநேகமாய் அவர்களுடைய பங்களாவில்தான் இருப்பார்கள். நாங்கள் புறப்பட்டு வந்த அவசரத்தில், அவர்களுக்குச் செய்தி சொல்லி அனுப்பமாட்டாமல் வந்து விட்டோம். வேறே யாரிடத்திலாவது சங்கதியைத் தெரிந்து கொண்டு அவர்களும் அநேகமாய் வெகு சீக்கிரம் இங்கே வந்து