பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

மாயா விநோதப் பரதேசி

பசியினால் அவஸ்தைப்படும் கறையான்கள் அவருடைய கோவணத்தை அறித்துத் தின்கிறதாக வைத்துக் கொள்வோம். அல்லது, திருவோடில்லாமல் அவஸ்தைப்படும் வேறொரு பரதேசி அவருடைய திருவோட்டை எடுத்துக் கொண்டு போவதாக வைத்துக் கொள்வோம். அப்போது என்ன நடக்கும்? படுத்துக் கொண்டிருக்கும் துறவி அந்தக் கறையான்களை அடித்து நசுக்கிக் கொல்லாவிட்டாலும், அப்புறமாவது ஒட்டிவிடுவார். அல்லது, தாமாவது எழுநது அபபால் போய்விடுவாரே அன்றி கறையானுடைய பசி தீரட்டும் என்று கோவணத்தை விட்டிருக்க மாட்டார். அவர் உண்மையில் உலகைத் துறந்தவராகவே இருக்கலாம். அவருக்கு ஒருவிதப் பற்றும் இல்லாமல் இருக்கலாம். இந்த உலகத்தில் மற்ற மனிதரோடு இருந்து பழக வேண்டுமானால், மனிதர் தம்முடைய மானத்தை மறைத்துக் கொள்வது அவசியம் என்று ஜனங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லாமல் அந்தத் துறவி நிர்வானத்தோடு ஊருக்குள் வந்தால் எல்லோரும் அவரைக் கல்லால் அடிப்பார்கள். அதுபோல உலகத்தார் நிலம் முதலிய சகலமான பொருள்களையும் தம் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருப்பதோடு, அதைப் பிறர் எடுத்துக் கொள்வது திருட்டுக் குற்றமென்று அதற்குத் தண்டனையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஜனங்களுடைய உரிமைகளையும் உடைமை களையும் காப்பாற்ற அரசன் என்றும், நீதிபதி என்றும், போலீஸ் என்றும், சிறைச்சாலை என்றும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இத்தனை நிர்ப்பந்தங்களுக்குள் ஏழை மனிதன் இருந்து கொண்டு தனது மானத்தை மூடி, வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. வயிற்றுப் பசிக்கு ஆகாரம் போட்டால், உடம்பு பெருக்கிறது. ஐம்புலன்களின் ஆசையும் பெருகுகிறது, அவனுக்கு மனைவி ஒருத்தி வேண்டியிருக்கிறது. அவளை அடைந்தால், பிள்ளை குட்டிகள் தாராளமாகப் பெருகுகிறார்கள். அவர்களோடு அவனுடைய துன்பங்களும் இல்லாமையும் அமோகமாக வளருகின்றன. அவனும் அவனுடைய குடும்பத் தாரும் சேர்ந்து இரவு பகலாய் உழைத்துப் பொருள் தேடினால் கூட அவர்களுடைய அன்றாடப் பசி திருவதுகூட அரிதாக