பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

31

கம்பெனிகளையோ, காப்பித் தோட்டங்களையோ அப்படியே கொடுத்து விட்டுச் சீமைக்குப் போனதாகவும் நாம் கேள்வியுறுகிறோம். வேலைக்காரர்களின் நிலைமையே இப்படி இருக்குமானால், உயிருக்குயிரான மனைவிமார்கள் அடக்கம், பணிவு, உழைப்புக் குணம், பதிவிரதைத்தனம் முதலியவற்றோடு ஒழுகினால், அவர்களிடம், அந்த வெள்ளைக்காரர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நாம் எளிதில் யூகித்துக் கொள்ளலாம் அல்லவா. ஆகையால் எந்த நாட்டிலும், மேலே சொன்ன குணங்களைக் கண்டு மனிதர் வசியமாவது சகஜமே. இந்த உலகத்தில் மனசில் மாத்திரம் பிரியம் இருக்கிற தென்பது போதாது. ஏனெனில் ஒருவர் மனசில் உள்ளதை மற்றவர் அறிந்து கொள்ளும் சக்தி கடவுள் மனிதருக்கு வைக்கவில்லை அல்லவா. ஆகையால், ஒருவருடைய மனசில் பிரியம் இருக்கிறதென்பதை அவர் பற்பல சிறிய செய்கைகளால் காட்டி பரஸ்பர வாஞ்சையைப் பெருக்குவது அத்தியாவசியம்; எல்லாவற்றையும் படைத்துக் காத்தழிக்கும் கடவுளையே நாம் எடுத்துக் கொள்ளுவோம். நாம் மனசிற்குள்ளாகவே அவருடைய விஷயத்தில் பக்தியை வைத்து அதை அபிவிருத்தி செய்து கனிய வைப்பது என்றால், அது முடியாத காரியம். ஆகையால் நாம், ராமா கிருஷ்ணா என்று அடிக்கடி வாயால் ஜெபித்து அந்த நினைவை மனசில் பதிய வைக்கிறோம். கோவிலுக்குப் போய் தேங்காய் பழம் முதலியவற்றை நிவேதனம் செய்கிறோம். இந்த உலகத்தில் உள்ள தேங்காய் பழங்களை எல்லாம் சிருஷ்டிக்கும் கடவுளுக்கு நாம் ஒரு தேங்காயையும் இரண்டு பழங்களையும் வைத்து நிவேதனம் செய்வது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றினாலும், நாம் அப்படிப்பட்ட சிறிய சிறிய விஷயங்களைச் செய்து நமது கவனத்தில் ஒரு பாகத்தை அவர் விஷயத்தில் செலவு செய்து, நமது சம்பாத்தியத்திலும் ஒரு பாகத்தைக் கடவுள் விஷயத்தில் சந்தோஷமாகச் செலவழித்து வந்தால், கடவுளின் நினைவும், அவரது விஷயத்தில் ஒருவித பக்தியும் நம்முடைய மனசில் பதிந்து நாளடைவில் விருத்தி யடைந்து வயசு முதிர முதிர தாயைப் பிரிந்த கன்று, தாயைக் காண எவ்வளவு ஆவல் கொள்ளுமோ அதுபோல, கடவுளை