பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

மாயாவிநோதப் பரதேசி

இரு திறத்தாருடைய ஜனங்களும் வந்திருப்பார்கள். பெண்ணினிடம் ஏதாவது கெடுதல் இருந்தாலும், அதை நாம் அந்தச் சமயத்தில் கண்டுபிடிக்க முடியாது. அப்படி நாம் கண்டு பிடித்தாலும், தாட்சணியம் வந்து போராடும். இவ்வளவு தூரம் ஏற்பாடுகள் நடந்த பிறகு, நாம் தடங்கல் செய்வதா என்று ஓர் அச்சமும், தயக்கமும் உண்டாகிவிடும். இது தான் நமக்குப் பிராப்தம் என்ற வேதாந்தத்தினால், நாம் நம்மை ஆறுதல் செய்து கொண்டு காரியத்தை நிறைவேற்றி விடுவோம். நிச்சயதார்த்தத்துக்கு நாம் போவதென்றால், நாம் இந்தக் கலியாணத்துக்கு இசைந்து போகிறோம் என்பதைக் காட்டும். ஆதலால், அதன் பிறகு நாம் ஆட்சேபனை சொல்வது ஒழுங்காகாது.

கந்தகாமி:- அது நியாயந்தான். இப்போது நாம் போய்ப் பார்த்துத்தான் என்ன தெரிந்து கொள்ளப் போகிறோம்? பெண் பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கலாம். இயற்கையான அழகு அவளுக்கு இல்லாதிருந்தாலும், அவள் நல்ல பெரிய மனிதருடைய பெண் ஆகையால், நல்ல போஷணையினாலும், ஜரிகைப் புடவைகள், பட்டுப் புடவை, வைர நகைகள் முதலிய வைகளை அணிந்து கொண்டிருப்பதாலும், பார்ப்பதற்கு வசீகரமாகத் தான் இருப்பாள். அதுவும் அல்லாமல் பேய்கள் கூடப் பக்குவகாலத்தில் அழகாகத்தான் இருக்கும் என்று சொல்வதில்லையா. அது போல இவளுக்கு வயசும் பதினாறு, பதினேழு ஆகிறது. வெளிப்பார்வை பகட்டாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். கலெக்டருடைய பெண், பி.ஏ., வகுப்பில் படிப்பவள் என்றால், தங்க மூக்குக் கண்ணாடி அவசியமாக இருக்கும்; கை மணிக்கட்டில் அழகான கடிகாரம் கட்டிக் கொண்டிருப்பாள். வெள்ளைக்காரிகளைப் போல மெல்லிய மஸ்லின் ஜாக்கெட் அணிந்திருப்பாள். முகத்தில் மஞ்சள் குங்குமத்துக்குப் பதிலாக ரோஸ் பவுடர், கொண்டை ஊசி முதலியவைகளை அவசியம் காணலாம். தற்கால நாகரிகப்படி, அவள் வீணை, ஹார்மோனியம் முதலிய வாத்தியங்கள் ஏதாவது வாசிக்கக் கூடியவளாக இருக்கலாம். இந்த அங்கங்களில் இருந்து நாம் அவளுடைய உண்மையான குணம் எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள முடியுமா? அவள் அடக்கம்,