பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

மாயாவிநோதப் பரதேசி

ருடைய பெண் பி.ஏ., பரிட்சையில் தேறியவளாம். அவளுடைய புருஷனும் அதே மாதிரி படிப்பாளியாம். அவர் ஏதோ ஒரு பிரமேயத்தைக் கருதி தமது மாமனாருடைய வீட்டுக்கு வந்திருந்தாராம். வந்திருந்த இடத்தில், உடம்பு கொஞ்சம் அசெளக்கியப்பட்டுப் போயிற்றாம். நடு இரவில் அவர் தேகபாதை நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு தோட்டத்திற்குப் போக நேர்ந்ததாம். அந்தச் சமயத்தில் அந்தப் பங்களாவில் இருந்த வேலைக்காரர்களை எழுப்பி உடத்திரவிக்க அவருக்கு மனமில்லாமல், பக்கத்து அறையில் சயனித்திருந்த தம்முடைய மனைவியிடம் போய் தாம் அவசரமாக வெளிக்குப் போக வேண்டும் என்றும், தமக்கு ஒரு செம்பில் தண்ணிர் கொண்டு வந்து தோட்டத்தில் வைக்கும்படியும் அவர் சொன்னாராம். உடனே அந்த அம்மாளுக்கு ரெளத்திராகாரமான கோபம் வந்து விட்டதாம். அவள் உடனே அவரை நோக்கி, “ஓகோ! அப்படியா சங்கதி! நான் என்ன உம்முடைய ஜாடுமாலி என்று நினைத்துக் கொண்டீரா? யாரைப் பார்த்து இப்படிப்பட்ட அவமரியாதையான வார்த்தைகளைச் சொல்லுகிறீர்? உமக்கு நான் எந்த விதத்தில் தாழ்ந்தவள்? இப்படி எல்லாம் நீர் என்னை அகெளரதையாக நடத்துவீர் என்பது தெரிந்திருந்தால், நான் உம்மைக் கலியானம் செய்து கொண்டே இருக்கமாட்டேன். இந்த அகால வேளையில் நித்திரைக்குப் பங்கம் வந்தால், உடம்பு கெட்டுப் போகும் என்பது தெரியாதா? நீர் இப்படித்தான் பட்டிக்காட்டு அநாகரிக மனிதன் போல நடந்து கொள்ளுகிறதா? இது என்ன நளாயணி, சாவித்திரி முதலியோருடைய காலம் என்று நினைத்துக் கொண்டீரா? உமக்குச் சமமாக நானும் படித்திருக்கிறேன். நீர் பி.ஏ. படித்து விட்டு 35 ரூபா சம்பளத்தில் அமர்ந்தால், நான் அதே பரிட்சையில் தேறி 150 ரூபா சம்பளத்தில் அமரப் போகிறேன். ஆகையால் யாருடைய யோக்கியதை மேலானது என்பதைக் கவனித்துப் பாரும். இங்கிலீஷ் படிப்புப் படித்தும் வெள்ளைக்காரருடைய உயர்வான நாகரிகத்தை நீர் கொஞ்சமும் தெரிந்து கொள்ளாத சுத்தக் கட்டுப்பெட்டியாக இருக்கிறீர். உமக்கும் நமக்கும் கொஞ்சமும் பொருந்தாது. நீர் இந்த க்ஷணமே புறப்பட்டு இந்தப் பங்களாவைவிட்டு வெளியில்