பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

49

கடைசியில், பெண் எப்படி இருக்கிறதென்று கூடப் பார்க்காமல் இதை முடிக்க நீ சம்மதித்திருக்கிறாய், பெண்ணுக்கு ஒரு கண் பொட்டையாக இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். அல்லது பெரியம்மை வார்த்து முகம் எல்லாம் அம்மைத் தழும்புகளால் விகாரப்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம்; அல்லது, காது செவிடாக இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம், கலெக்டருடைய பெண்ணுக்கு இந்தப் பிணியெல்லாம் இராது என்று நாம் நிச்சயித்துக் கொள்ளுவது சரியாகுமா? இதெல்லாம், பார்பதற்கு அருவருப்பான விஷயமல்லவா. பெண்ணின் உண்மையான குணம் அயலாருக்குத் தெரியப் போவதில்லை. அதனால், பிர்காலத்தில் துன்பமடைகிறவர்கள் நாமே! வெளிப் பார்வைக்கே விகாரமான அம்சம் ஏதாவது இருக்குமானால், ஊரார் சிரிக்க இடம் ஏற்படுமே. அதையாவது நீ பார்க்க வேண்டியது அவசியம் என்று என் மனசில் படுகிறது. உன் தகப்பனார் முதலியோர் என்ன காரணத்தினால் நன்றாக ஆராயாமல் இப்படிச் செய்திருந்தாலும் இருக்கட்டும். நீ இந்த ஊரில் தானே இருக்கிறாய். நிச்சயதார்த்த தினம் இன்னம் 10 தினமிருக்கிறதே. அதற்குள் நீ ஏதாவது தந்திரிம் செய்து அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டு வருவது நல்லது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுதான் பதமல்லவா. அதுபோல, நீ அந்தப் பெண்ணைப் பார்க்கையில், அவளுடைய நடையுடை பாவனைகள் குணங்கள், முதலியவை எப்படி இருக்கின்றன என்பதைக் கவனித்து வந்தால், அதிலிருந்து நாம் அநேக விஷயங்களை யூகித்துத் தெரிந்து கொள்ளலாம் என்றான்.

அவ்வாறு அந்த யௌவனப் புருஷர்கள் இருவரும் வேடிக்கையாக சம்பாஷித்துக் கொண்டே கரையை விட்டு வெகுதுரம் இப்பால் வந்துவிட்டார்கள்.

கந்தசாமி சிறிது யோசனை செய்த பின் மறுபடியும் பேசத் தொடங்கி, சரி உன் மனசுக்குத் தான் குறை எதற்கு? நீ சொல்லுகிறபதியே ஆகட்டும். நான் போய் அவளைப் பார்த்து எப்படி இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டு வருகிறேன். ஆனால், இப்படி நான் செய்கிறேன் என்பது, என்னுடைய தாய் மா.வி.ப.1-5