பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

மாயா விநோதப் பரதேசி

அவருக்கு வலது பக்கத்தில் சிறிது தாரத்திற்கு அப்பால் இருந்த பிரம்மாண்டமான ஒரு கம்பத்தின் மறைவில் மறைந்தும் மறையாமலும், அவரது தர்மபத்தியான திரிபுரசுந்தரியம்மாள் உட்கார்ந்து அவரது சிவபூஜைக்கு வேண்டிய புஷ்ப் மாலைகள், சாமக்கிரியைகள் முதலியவற்றை அத்தியந்த பயபக்தி விருப்பத்தோடு தயாரித்துக் கொண்டும், இடையிடையே தனது கணவர் கூறிய வார்த்தைகளுக்கு மறுமொழி சொல்லிக் கொண்டும், அந்த மாளிகையின் பின் புறத் தோட்டத்திலிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் கொணர்ந்து உள்ளே பாத்திரங்களில் நிரப்பிக் கொண்டிருந்த வேலைக்காரிக்கு ஏதோ உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டும் இருந்தாள். அந்த அம்மாளின் உடம்பும் கட்டுக் கலையாமல் தங்கம் போலப் பழுத்து அழகும் வசீகரமும் நிறைந்ததாக இருந்தது.

மஞ்சள் பூசி ஸ்நானம் செய்ததால், மங்களகரமாகத் தோன்றிய அந்த அம்மாளினது நெற்றியில் விபூதி, குங்குமப் பொட்டு முதலியவை அழகாய் ஜ்வலித்தன. உடம்பில் வைரம், கொம்பு, தங்கம் முதலியவற்றால் ஆன ஏராளமான ஆபரணங்களும் பட்டாடையுமே காணப்பட்டன.

அவர்களிருந்த கூடத்திற்குப் பக்கத்தில் இருந்த பெருத்த சமையலறை ஓர் அற்ப மாசு மறுவேனும் காணப்படாமல் மகா பரிசுத்தமாக மெழுகிப் பெருக்கி நன்றாகக் கோலமிடப் பெற்றிருந்தது. அதற்குள் காணப்பட்ட கெங்காளங்கள், குடங்கள், கவலைகள், செம்புகள், தண்ணீர் பருகும் குவலைகள் முதலிய சகலமான பாத்திரங்களும் பளிச்சென்று சுத்தி செய்யப்பட்டு அதனதனிடத்தில் நேர்த்தியாகவும் வசீகரமாகவும் வைக்கப் பெற்றிருந்தன. அடுப்பில் கமகமவென்று மணம் கமழ்ந்த மாதுரியமான பதார்த்தங்கள் தயாராகிக் கொண்டிருந்தன. அடுப்பின் பக்கத்தில் சிறிது தூரத்திற்கப்பால், விசாலமான ஒரு பெருத்த மணைப்பலகையின் மீது புத்தரைமாற்றுத் தங்கத்தினால் வார்க்கப் பெற்றது போலவும், அப்போதே முளைத்தெழும் பூர்ண சந்திரோதயம் போலவும் ஒரே அழகுத் திரளாக அமைந்து, அங்கே தயாரான பக்குவ பதார்த்தங்களைக்