பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

57

கடாக்ஷித்த வண்ணம் ஒரு பெண் வடிவம் காணப்பட்டது. அந்த மின்னற் கொடியோள் நிரம்பவும் கவனமாக அப்புறம் இப்புறம் திரும்பித் தனது அலுவலை அந்தரங்க பக்தி விநயத்தோடு செய்து கொண்டிருந்தாள் என்பது, கயல் : மீனைப் போலத் துள்ளித் துள்ளிக் குதித்து மை தீட்டப்பெற்ற அவளது வசீகரமான கருவிதிகளின் சுறுசுறுப்பான் பிற்ழ்ச்சியிலிருந்து எளிதில் தெரிந்தது.. மணிப்புறாவின் முகம் போல அவளது வதனம் சாந்தமும், அழகும், நிஷ்கபடமும் தோற்றுவிப்பதாகவும், காண்போர் மனதைக் காந்தம் போலக் கவரும் மந்திர உச்சாடன வதிகரச் சக்கரம் போலவும் காணப்பட்டது. அவளது வயது சற்று ஏறக்குறைய பதினெட்டே இருக்கலாம். அவளும் திரிபுரசுந்தரியம்மாளைப் போல நீராடி விபூதி, செஞ்சாந்துத் திலகம் முதலியவற்றை அணிந்து, தகத்தகாயமான பனாரீஸ் புடவை, ரவிக்கை, வைரக்கம்மல், வைரமூக்குப் பொட்டு, வைர அட்டிகை, வைரமிழைத்த தங்க ஒட்டியாணம் முதலியவற்றை அணிந்து கந்தருவ தேசத்து ராஜகுமாரி போல விளங்கினாள். கூடத்தில் தனது மாமன் மாமியார். சம்பாஷித்து இருந்ததையும் அவள் கவனித்து, சமைலையும் கவனித்திருந்தாள். ஆதலால், சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி அவளது சுந்தரவதனம் மாறிமாறித் தோன்றிக் கொண்டிருந்தது, உயர்தர வைரக்கல்களில் தோன்றும் ஜிலு ஜிலுப்பைப் போலத் தென்பட்டது. அவளது முகம், மகாநுட்பமான புத்தி விசேஷத்தையும், சாந்தம், பொறுமை, அடக்கம், பணிவுடைமை, உழைப்புக் குணம், கற்பின் உறுதி, நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு, மன அமைதி, திருப்தி முதலிய மங்களகரமான கலியாண குணங்கள் அனைத்திற்கும் உற்பத்தி ஸ்நானம் போல விளங்கியது. எப்பேர்ப்பட்ட பரம தரித்திரனும், துரதிர்ஷ்டவானும் காலையில் எழுந்து அந்த உத்தமமாது சிரோன் மணியின் முகத்தில் விழிப்பானாகில், ஏழேழு தலைமுறைக்கும் அவனைப் பிடித்த பீடை விலகிப் போவதோடு, அவனது மனதில் உண்டாகும் ஆனந்தப் பெருக்கு ஆறுமாசத்திற்கு அடங்காதென்றே சொல்ல வேண்டும். அவனது ஆயிசுகாலம் முடிய அவனுக்குப் பசி என்பதே தோன்றாதென்று சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட தெய்வீகத் தோற்றம் வாய்ந்த