பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்

59

தவிர எங்கே இருக்கிறது. அங்கே தான் அவர்களை வைக்க வேண்டும்" என்றாள்.

சிறிது நேரம் இருவரும் மௌனம் சாதித்த பிறகு திரிபுரசுந்தரி அம்மாள், "காலையில் எழுந்து வெளியில் போன பெரிய தம்பி கண்ணப்பாவை இன்னமும் காணோமே. வழக்கம் போல் பண்ணையைச் சுற்றிப் பார்க்கப் போனானா? வேறே ஏதாவது: காரியமாக அனுப்பினீர்களா? மணி எட்டு இருக்கும் போல் இருக்கிறது. இன்னம் பழைய அமுதுகூடச் சாப்பிடவில்லையே என்று நிரம்பவும் கவலையோடு கேட்க, வேலாயுதம் பிள்ளை "தம்பி இன்றைக்குப் பண்ணைக்குப் போகவில்லை; வேறே காரியமாய்த்தான் அனுப்பி இருக்கிறேன். நாம் நிச்சயதார்த்தத் துக்குச் சென்னப் பட்டணம் போனால், நம்மோடு சுமார் ஐம்பது ஜனங்களாவது வருவார்கள் என்று நினைக்கிறேன். எல்லோரும் தக்க மனிதர்கள் ஆகையால், நாம் அவர்களுக்கெல்லாம் சரியான வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் அல்லவா, நாளை வெள்ளிக்கு அடுத்த வெள்ளியன்று நிச்சயதார்த்தம் அல்லவா, நாம் புதன் கிழமை இரவு வண்டியிலேயே புறப்பட்டு வியாழக் கிழமையே பட்டணம் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். அதற்காக நமக்குப் பிரத்தியேகமாக ஆறு முதல் வகுப்பு வண்டிகளுக்கு முன் பணம் கட்டி ஏற்பாடு செய்துவிட்டு வரும்படி, அவனை ரயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பினேன். திரும்பி வரும்போது அப்படியே நம்முடைய (திகம்பர சுவாமியாருடைய ஜாகைக்குப் போய் விட்டு வரச் சொன்னேன். நேற்று நாம் வடிவாம்பாளுடைய வீட்டுக்குப் போய், நிச்சயதார்த்தத்துக்கு நம்மோடு பட்டணம் வரும்படி அழைத்து விட்டு வந்தோம் அல்லவா. அதுபோல, இன்றைய தினம் நாம் இருவரும் போய் நம்முடைய சுவாமி யாரையும் பிரார்த்தித்து அழைத்துவிட்டு வரவேண்டும் என்று உத்தேசித்திருந்தேன். நேற்று சாயங்காலம். நான் நம்முடைய சத்திரத்துக்குப் போய் மேல் விசாரணை செய்துவிட்டுத் திரும்பிய போது, நம்முடைய சுவாமியாரிடம் வேலை செய்யும் ஒரு போலீஸ் ஜெவானைக் கண்டு அவர் ஊரில் இருக்கிறாரா என்று விசாரித்தேன். ஒரு ரகசியமான திருட்டு விஷயமாகத் துப்பறிய அவர் நேற்று காலையிலே புறப்பட்டு எங்கேயோ போயிருப்ப