பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

65

இவ்வளவு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப் போகிறீர்கள் என்பதைப் பற்றி என்னைவிட நம்முடைய வடிவாம்பாளுக்குத், தான் அடக்க முடியாத சந்தோஷம் உண்டாகும்" என்றாள்.

வேலாயுதம் பிள்ளை, "இதெல்லாம் நம்முடைய வடிவாம் பாளுக்குத் தெரியாதென்று நீ நினைத்துக் கொண்டு இருக்கிறாயா? அன்றைய தினம் சிவக்கொழுந்தம்மாளிடம் நீ பேசிக் கொண்டிருந்த போது, நானும் அந்தக் குழந்தையும் கலந்து யோசனை செய்து தான் இப்படிச் செய்வதென்று தீர்மானித்தோம். எல்லாம் வடிவாம்பாளுடைய ஏற்பாடுதான். என்னுடையது ஒன்றுமில்லை" என்றார்.

திரிபுரசுந்தரியம்மாள், "ஓகோ அப்படியா! மாமனாரும், மருமகளும் இம்மாதிரியான யோசனைகளை எல்லாம் ரகஸியத்தில் செய்து, நாங்கள் எல்லோரும் பிரமித்துப் போகும்படி செய்ய வேண்டும் என்று உங்களுடைய எண்ணம் போலிருக்கிறது. இந்த நிச்சயதார்த்தத்தின் வரிசையே இப்படி இருக்கிறது. இன்னம் கலியாணத்திற்கு என்னென்ன வரிசைகள் செய்ய ஏற்பாடாகி இருக்கிறதோ தெரியவில்லையே! இந்த ஏற்பாடெல்லாம், இந்தக் கலியாணத்தை இணைத்து வைத்த நம்முடைய சாமியாருக்குத் தெரியுமோ" என்றாள்.

வேலாயுதம் பிள்ளை, "இதெல்லாம் அற்ப விஷயம். இதை எல்லாம் நாம் சுவாமியாரிடத்தில் சொல்லுகிறதா? அவருடைய கவனம் எல்லாம் அபாரமான பெரிய பெரிய காரியங்களில் சென்று கொண்டிருக்கிறது. நாம் இன்னின்ன வரிசைகள் செய்கிறோம் என்பது அவருக்கு ஒரு பொருட்டல்ல. முக்கியமாக இந்தக் கலியாணக் காரியம் நடைபெற வேண்டும். அது ஒன்றே அவருடைய கவலை. மற்ற சில்லரை விஷயங்களை எல்லாம் நாம் எப்படிச் செய்தாலும், அதைப்பற்றி அவர் சிந்தனை செய்ய மாட்டார். இப்போது நாம் முதலில் இந்த நிச்சயதார்த்தத்தை முடித்துக் கொண்டு வந்தால், அதற்கு மேல் கலியாண ஏற்பாடு களைப்பற்றி அப்பால் யோசனை செய்து கொள்ளலாம்" என்றார்.

அந்தச் சமயத்தில், "அப்பா! அப்பா!" என்று ஆவலோடு கூப்பிட்டுக் கொண்டு அவர்களுடைய மூத்த குமாரனான

மா.வி.ப.I-6