பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

மாயா விநோதப் பரதேசி

நிரம்பவும் அழகு வாய்ந்தவளும், ஏராளமான உயர்தர ஆபரணங்களும் பட்டாடையும் தரித்தவளும், தாசியைப் போலக் காணப்பட்டவளுமான ஒரு பெண் பிள்ளை நின்று கொண்டிருந் தாளாம். அவள் வார்டர்களைப் பார்த்து மரியாதையாகவும், அன்பாகவும் பேசி எண்ணெயை உள்ளே கொண்டு வரச் சொன்னாளாம். அவள் யாரோ பெரிய மனுஷியென்று நினைத்த வார்டர்கள் கைதியை அழைத்துக் கொண்டு உள்ளே போனார்களாம். அவர் நடையைக் கடந்து முற்றத்தில் போய்க் கொண்டிருந்தார்களாம். உடனே படேரென்று வாசல் கதவு சாத்தி மூடப்பட்டதாம். சுமார் 10 முரட்டு மனிதர்கள் எங்கிருந்தோ குபீர் என்று பாய்ந்து, இரண்டு வார்டர்களின் மென்னியைப் பிடித்து பலமாக அழுத்தி அவர்கள் கூச்சலிடாமல் பிடித்துக்கொண்டு, அவர்களுடைய வாயில் துணியை அடைத்து, கைகளையும் கால்களையும் மணிக்கயிற்றால் கட்டிப்போட்டுக் கீழே உருட்டி விட்டார்களாம். சட்டைநாத பிள்ளை எண்ணெய்க் கூடையை உடனே கீழே வைத்தாராம். அவருடைய கால் விலங்குகளை ஆள்கள் வெட்டிரும்பால் உடனே வெட்டி எறிந்து அவருடைய ஜெயில் உடைகளையும் விலக்கி, சிறப்பான வஸ்திரங்களை அணிவித்து அவரை அழைத்துக் கொண்டு உடனே வெளியில் போய்விட்டார்களாம். அவர்களை உள்ளே அழைத்த தாசியும் வெளியில் போய்விட்டார்களாம். அதன் பிறகு ஒரு நாழிகை காலம் வரையில் அந்த வார்டர்கள் தத்தளித்து முற்றத்தில் கிடந்து புரண்டதில், ஒருவருடைய வாய்த்துணி கீழே வீழ்ந்து விட்டதாம். அவர் உடனே பலமாகக் கூச்சலிட்டாராம். அதைக் கேட்டு யாரோ வழிப்போக்கர் சிலர் வந்து பார்த்து விஷ்யங்களை அறிந்து ஆச்சரியம் அடைந்து, கட்டுகளை அவிழ்த்துவிட, வார்டர்கள் வெளியில் ஓடிக் கூக்குரல் செய்ய, ஜனங்கள் எல்லோரும் வந்து திரண்டு நாலா பக்கங்களில் ஓடி கைதியையும் மற்றவரையும் கண்டுபிடிக்க முயன்றார்களாம். அந்தச் செய்தி போலீஸ் சூபரின்டென்டெண்டுக்கும் ஜெயிலருக்கும் எட்ட, அவர்களும் போலீஸ் வீரர்களோடு வந்து கைதியைப் பிடிக்க ஏற்பாடு செய்தார்களாம். தஞ்சையில் இருந்து வெளியூருக்குப் போகும் ரஸ்தாக்களில் எல்லாம் ஜெவான்கள் நின்று ஊரிலிருந்து