பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

மாயா விநோதப் பரதேசி

அமைத்தான். அந்த மாளிகையின் பின்புறத்தில் இருந்த தோட்டத்தின் வழியாகப் பின்புறத் தெருவில் இருந்த அவர்களது இன்னொரு வீட்டுக்குப் போகும் பாதையை அடைத்து குறுக்கில் ஒரு பெரிய மதில் எழுப்பி இப்புறத்தில் இருந்து அப்புறமும் அப்புறத்தில் இருந்து இப்புறமும் மனிதர் போக வழியில்லாதபடி தடுத்ததும் அன்றி, அப்புறத்தில் இருந்த வீட்டில் யாரோ ஒரு குடும்பத்தாரைக் குடி வைத்தான். அவன் அத்தனை மாறுபாடுகளையும், ஏற்பாடு களையும் செய்து முடிப்பதற்கு சுமார் பதினொரு மாதகால மாயிற்று. அவன் பகற் பொழுதில் வெளியில் போகாமல் இருந்த தன்றி இரவிலும் உள்ளே இருந்தபடியே இதர மனிதர்களின் உதவியைக் கொண்டு தனது விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டு வந்தான். போலீஸ் ஜெவான்கள் தினந்தினம் பகற்பொழுதிலும் இராக் காலத்திலும் வந்து வந்து அவனை ஆஜர் பார்த்து, அவனோடு சந்தோஷமாகப் பேசிச் சிறிது நேரம் இருந்துவிட்டுச் சென்றனர், அவன் அவர்களது நட்டம் உதவியும் தனக்கு எப்போதும் தேவையாக இருக்கும் என்ற கபட எண்ணத்தோடு, அவர்களிடம் நிரம்பவும் பிரியமாகவும், நட்பாகவும் நடந்து அடிக்கடி ஏராளமான சன்மானங்களை அள்ளிக் கொடுத்து! அவர்களுடைய பரஸ்பர பிரியத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்து வந்தான், அவ்வாறிருந்த காலத்தில் ஒரு நாள் பகல் சுமார் 1-மணி சமயத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாவையங்கார் ஆயுத பாணிகளான ஆறு ஜெவான்கள் தொடர வந்து, சட்டைநாத பிள்ளையினது மாளிகையின் வாசற் கதவை இடிக்க, உடனே வேலைக்காரன் கதவைத் திறந்தான்.

இன்ஸ்பெக்டர் வேலைக்காரனைப் பார்த்து "அடேய்! உள்ளே மாசிலாமணிப் பிள்ளை இருக்கிறாரா?" என்று அதிகாரத்தோடு கேட்க வேலைக்காரன், "இருக்கிறார்; இப்போதுதான் சாப்பிட்டு கூடத்தில் சோபாவின் மேல் உட்கார்ந்து தாம்பூலம் போட்டுக் கொண்டிருக்கிறார்" என்றான்.

அதைக் கேட்ட அண்ணாவையங்கார் அதற்கு மேல் வேலைக் காரனோடு வார்த்தையாடாமல், வாசலில் உருவிய கத்தியோடு