பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

மாயா விநோதப் பரதேசி

இவ்வளவு பணச் செலவு செய்தும், இத்தனைபேர் சேர்ந்து பிரயாசைப்பட்டும் காரியம் கெட்டுப் போய்விட்டதே என்றும், நான் இன்னும் கொஞ்சம் அதிக எச்சரிப்பாக நடந்து கொண்டிருந் தால், இந்தத் தவறு நடந்திருக்காதே என்றும் நினைக்க நினைக்க, எனக்கு என் மேலேயே கோபம் பிறந்தது. இப்படிக் காரியத்தைக் கெடுத்தவர்களுக்குச் சன்மானம் கூடவா என்ற ஆத்திரமும் உண்டாயிற்று. அதனால் அப்படிச் சொன்னேன். தங்கள் பேரில் எனக்கு எள்ளளவும் ஆயாசமில்லை. இது பிரமாணிக்கமான விஷயம். என்னவோ நடந்தது நடந்துவிட்டது. அதைப்பற்றி நாம் அதிகமாகப் பாராட்டிப் பேசுவதால், கெட்ட காரியம் திருந்தப் போவதில்லை. இனி ஆகவேண்டிய காரியத்தையாவது நாம் ஏமாறாமல் சரியானபடி நடத்த வேண்டும் என்று என் மனசைத் திடப்படுத்திக் கொள்வதைத் தவிர முக்கியமான விஷயம் வேறொன்றும் இல்லை. நான் ஆள்களோடு இன்றைய தினம் இரவே புறப்பட்டுப் பட்டணம் போய், நாளைய இரவில் அவளை எடுத்துக் கொண்டு விடியற்காலம் இங்கே வந்து சேருகிறேன். எனக்கு உத்தரவு கொடுங்கள். என்னுடைய ஆள்கள் மூலைக்கு ஒருவராய்ப் போயிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் சேர்த்துப் பிடித்துக் கொண்டு இன்றைய இரவு வண்டியிலேயே பட்டணம் போய்ச் சேருகிறேன். சிலர் மோட்டார் வண்டியில் வண்டிப்பாதை வழியாக வரட்டும்.

மாசிலாமணி:- (சிறிது நேரம் யோசனை செய்து) அன்றைய தினம் நீங்கள் செய்த அமர்க்களத்தின் பிறகு, பட்டாபிராம பிள்ளை மூன் போல அஜாக்கிரதையாக இருப்பார் என்று நான் நினைக்க வில்லை. யாரோ விரோதிகள் அவர்களுக்குக் கெடுதல் செய்ய எண்ணிக் கொண்டிருப்பதாக யூகித்துக் கொண்டு, பட்டாபிராம பிள்ளை இன்னும் இரண்டொரு மாசகாலம் வரையில் ஏராளமான போலீஸ் ஜெவான்களையும் டலாயத்துகளையும் தம்முடைய பங்களாவில் காவலாக வைத்திருப்பார் எனத் தோன்றுகிறது. ஆகையால் நீங்கள் மறுபடியும் போய், முயற்சித்தால் அநேகமாய் நீங்கள் அவர்களிடம் அகப்பட்டுக் கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன். ஆகையால், நாம் இனி