பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

99


கொஞ்ச காலத்திற்கு மனோன்மணியின் விஷயத்தை நிறுத்தி வைப்போம். அதற்குள் நாம் மற்றவர்களுடைய வேலையை முடிக்கலாம். எனக்கு இன்னொரு யோசனை தோன்றுகிறது. அதன்படி முடித்து விடுவோம்.

இ. சேர்வைகாரன்:- என்ன யோசனை? சொல்லுங்கள். அப்படியே நிறைவேற்றி விடுவோம்.

மாசிலாமணி:- மனோன்மணியை நாம் கொண்டு வந்து விட்டபடியால் பட்டாபிராம பிள்ளை அந்த விஷயத்தை வேலாயுதம் பிள்ளைக்குத் தெரிவிப்பார் என்றும், நிச்சயதார்த்தம் நின்று போய்விடும் என்றும், இவர்கள் பட்டணம் போவதை நிறுத்தி விடுவார்கள் என்றும் நாம் நினைத்தோம் அல்லவா? அது இப்போது தவறான நினைவாகப் போய்விட்டது. அவர்கள் முன்னே எண்ணியபடி வெள்ளிக்கிழமை அன்று நிச்சயதார்த் தத்தை எப்படியும் நடத்துவார்கள். வேலாயுதம் பிள்ளை விட்டார் எல்லோரும் அதற்காக நாளைய தினம் புறப்பட்டுப் போவதும் நிச்சயமாகத் தோன்றுகிறது.

இ. சேர்வைகாரன்:- ஆம், இனிமேல் அவர்கள் ஏன் நிச்சயதார்த் தத்தை நிறுத்தப் போகிறார்கள்? அது வெள்ளிக்கிழமை அவசியம் நடந்தே தீரும். இவர்கள் முன்பு தீர்மானித்திருந்தபடி புதன் கிழமையே மன்னார்குடியை விட்டுப் புறப்பட்டு சென்னப் பட்டணம் போவதும் நிச்சயம். வேலாயுதம் பிள்ளை, கண்ணப்பா, வடிவாம்பாள், கந்தசாமி முதலியோருக்கு நாம் மரியாதை நடத்த வேண்டும் என்று சொன்னர்களே. அதை நாம் எப்போது நடத்துகிறது? இன்று செவ்வாய்க்கிழமை. ஆகையால், அவர்கள் நாளைய தினம் அந்தியில் புறப்படும் வண்டியில் ஏறிக் கொண்டு போய்விடுவார்கள். நிச்சயதார்த்தத்திற்கு முன்பு நாம் நம்முடைய எண்ணத்தை முடிப்பதாய் இருந்தால், இன்றைய தினம் இரவில் தான் அதை நிறைவேற்ற வேண்டும். இன்று தவறினால், இனி அவர்கள் பட்டணத்தில் இருந்து திரும்பி வந்த பிறகு தான் நாம் அதை நடத்த வேண்டும். ஆனால் இதில் ஒரு விஷயம் இருக்கிறது. இன்றைய தினம் இரவிலேயே நாம் இவர்கள் எல்லோருக்குமே, அல்லது, சிலருக்கோ அங்கஹறினம்