பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

மாயா விநோதப் பரதேதி


செய்து விட்டால், இவர்கள் பட்டணம் போவதை நிறுத்தி விடுவார்கள். நிச்சயதார்த்தமும் நின்று போய்விடும். இப்படி அங்கஹlனம் அடைந்தவர்களுடைய வீட்டில் பட்டாபிராம பிள்ளை தம்முடைய பெண்ணை வாழ்க்கைப்படுத்துவதை அவர் ஒர் அவமானமாக நினைத்து, தம்முடைய பெண்ணை வேறே யாருக்காவது கட்டிக் கொடுத்து விடுவார். ஆகையால் நீங்கள் இதை எல்லாம் நன்றாக யோசித்து உங்களுடைய இஷ்டத்தை முடிவாகச் சொல்லி விடுங்கள்.

மாசிலாமணி:- (சிறிது நேரம் சிந்தனை செய்து) இந்த மன்னார் குடியாருக்கு இன்றைய தினம் மரியாதை நடத்தினால், நீர் எண்ணுகிறபடி பட்டாபிராம பிள்ளை தம்முடைய பெண்ணை இவர்களுடைய வீட்டில் கட்டிக் கொடுக்க மாட்டார் என்பது நிச்சயமே. அப்படி நடக்கும்படி நாம் விடக்கூடாது. ஏனென்றால், அதனால், பட்டாபிராம பிள்ளை எவ்வித தண்டனையும் இல்லாமல் தப்பிப் போகும்படி நாமே விட்டுவிடுவது போல முடியும். அவர் தம்முடைய பெண்ணை அந்தக் கந்தசாமிக்கே கட்டிக் கொடுப்பதற்கு உறுதியாக அவர்கள் நிச்சயதார்த்தத்தை நடத்த வேண்டும். அதன் பிறகு நாம் மன்னார்குடியார்களை மூளிப்படுத்த வேண்டும். அப்போது தான் பட்டாபிராம பிள்ளைக்கு சரியான அவமானமும் தலைகுனிவும் ஏற்படும். அங்கஹனப்பட்டவர்களுடைய வீட்டிலேயே அவர் தம்முடைய பெண்ணைக் கட்டிக் கொடுத்து அவர்களுடன் ஆயிசுகால பரியந்தம் சொந்தம் பார்ட்டியிருக்க வேண்டும். அதைவிட அதிகமான தண்டனை வேறு எதையும் நாம் பட்டாபிராம பிள்ளைக்குச் செய்ய வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

இ. சேர்வைகாரன்:- உண்மைதான்; தங்களுடைய பிரியப் படியே நடத்திவிடுகிறேன். அப்படியானால், இந்த மன்னார் குடியார் சென்னப் பட்டணத்தில் இருந்து திரும்பி வந்த பிறகு தானே நாம் அதை நிறைவேற்ற வேண்டும்? அவர்கள் திரும்பி ஊருக்கு வர ஐந்தாறு தினங்களாவது பிடிக்குமே!

மாசிலாமணி:- அவர்கள் மன்னார்குடிக்குத் திரும்பி வந்த பிறகு நாம் அவர்களை மானபங்கப்படுத்துவது அவ்வளவாக