பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

மாயா விநோதப் பரதேதி


சேர்த்து திராவகமாக இறக்கி விற்பனைக்கு அனுப்பிக் கொண்டு வருகிறார்கள். அந்த ரஸம் பார்ப்பதற்குப் பளிங்கு போல எவ்வித நிறமும் இல்லாமல் நுட்பமாகவும் பளபளப்பாகவும் தெளிவாகவும் இருக்கிறது. அந்த திராவகத்தில் ஒரு துளி மனிதனுடைய உடம்பிற்குள் சென்றால், ஒரு கொட்டைப் பாக்களவுள்ள அபினியைத் தின்றால் எவ்வளவு கடுமையான போதையும் மயக்கமும் உண்டாகுமோ, அதைவிடப் பன்மடங்கு அதிக போதையும் மயக்கமும் உண்டாகும். அந்த திராவகத்திற்கு எவ்வித மணமாவது ருசியாவது கிடையாது. அதை நாம் வேறே எந்த வஸ்துவோடு கலந்தாலும் அதைக் கலந்த குறியே தெரியாது. ஆனால் அந்த திராவகம் தங்கத்தைவிட அதிக விலையுள்ளது. அதில் நாம் கால் அவுன்ஸ் வாங்கிக் கொள்வோம். அதன் விலை ஐம்பது ரூபாய் இருக்கலாம். இருந்தாலும் பரவாயில்லை. அதை வாங்கிக் கொள்வோம். அதை நம்முடைய ரமாமணி தன்னுடைய இடுப்பில் பத்திரமாகச் சொருகி வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை இரவில் எல்லா ஜனங்களுக்கும் வேலாயுதம் பிள்ளை இறங்கி இருக்கும் ஜாகையிலாவது, அல்லது, பட்டாபிராம பிள்ளையின் வீட்டிலாவது போஜனம் தயாராகும். நம்முடைய ரமாமணி மெதுவாகச் சமையலறைக்குள் போய் சுயம்பாகிகளோடு பேச்சுக் கொடுத்து, தங்கள் குழந்தை ஒன்று பசியைப் பொறுக்க மாட்டாமல் அழுகிற தென்றும், அதற்குக் கொஞ்சம் சாதம் வேண்டும் என்றும் சொன்னால், அவள் கலியாணத்திற்கு வந்திருக்கும் உறவினளென்று சுயம்பாகிகள் நினைத்து, அவள் கேட்பதைக் கொடுப்பார்கள். அந்தச் சமயத்தில், இவள் தந்திரம் செய்து, தன் மடியில் இருக்கும் சீசாவைத் திறந்து, திராவகம் முழுதையும், அங்கே தயாரித்து வைக்கப் பட்டிருக்கும் குழம்பில் வார்த்துவிட்டு, சந்தேகத்திற்கு இடமில்லாமல் வந்து விடட்டும். திராவகத்தை வார்த்ததனால், குழம்பின் மணமாவது ருசியாவது கொஞ்சமும் கெடாது. அங்கே போஜனம் செய்பவர் எல்லோரும் அரை நாழிகைக்குள் மயங்கிப் போய் அப்படி அப்படியே விழுந்து விடுவார்கள். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் நாங்கள் போய்