பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

9

எண்ணத்தை ஜனங்களுடைய, மனசில் உண்டாக்குவதும் உசிதமாகத் தோன்றவில்லை. உயிரோடிருக்கும் மனிதரை இறந்து போய்விட்டதாகச் சொல்வது பெருத்த பாவச் செய்கை. இதற்கு முன்னாகவே ஒருதரம் அப்படிப்பட்ட இழுக்கு ஏற்பட்டது எங்கள் மனசுக்கெல்லாம் சகிக்க முடியாத துன்பமாக இருந்தது. ஒரு சுமங்கலியை அமங்கலி என்று சொல்வதைப் போன்ற மகா பாதகமான காரியம் வேறொன்றும் இல்லை. முன்னொரு தடவை அந்த அம்மாள் விதவை என்ற இழிவையும் அசுபமான பெயரையும் அடைந்தது போதாதா? மறுபடியும் அவர்களுக்கு அப்படிப்பட்ட இழுக்கையும் அவமானத்தையும் உண்டாக்குவது மகா பாவமான காரியம். நம்முடைய எதிரிகளை வெல்வதற்கு இது ஒன்றுதானா தந்திரம். எவ்வளவோ சாமர்த்தியமும் தந்திரமும் அறிந்த சுவாமிகளுக்கு இதைத்தவிர வேறே மார்க்கம் எதுவும் தோன்றாமலா போய்விட்டது. என் மனசுக்கு இந்த யோசனை பிடிக்கவே இல்லை. சுவாமிகளுடைய பத்தியாருக்கும் இது சம்மதமானதாக இராதென்பது நிச்சயம். சாமியார்:- குழந்தாய் வடிவூ! நான் இறந்து போய்விட்டேன் என்ற எண்ணம் ஏற்பட்டாலன்றி, நம்முடைய எதிரிகள் சும்மா இருக்க மாட்டார்கள். அவர்கள் எப்படியும் தந்திரம் செய்து ஏதாவது தீங்கு செய்யப் பிரயத்தனப் படுவார்கள். யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். அதுபோல, பகைவர்கள் தந்திரமாக வேலை செய்தால், நாம் அவர்களை வெல்வது அரிது. நான் உண்மையிலேயே இறந்து போவது நல்லதா? அல்லது, இறந்து போய்விட்டதாகக் கொஞ்ச காலம் வரையில் பொய்யான வதந்தியை உண்டாக்கிவிட்டு எதிரிகளை அடக்கிய பிறகு வெளிப்படுவது நல்லதா! நீயே யோசித்துப் பார். இப்படிச் செய்ய வேண்டும் என்று நான் தீர்மானித்ததற்கு முன், இதை என் சம்சாரத்தினிடம் சொன்னேன். இது நல்ல யோசனைதான் என்று அவள் ஒப்புக்கொண்டு, இதைச் செய்ய அனுமதி கொடுத்த பிறகே, நான் இதைத் தொடங்கினேன். முக்கியமாக நான் என்னுடைய உயிரைப்பற்றி அவ்வளவாகக் கவலைப்பட வில்லை. அவர்கள் உங்கள் எல்லோருக்கும் கெடுதல் செய்ய முயற்சிப்பது திண்ணமான விஷயம். அதை நான் தடுத்தே