பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

மாயா விநோதப் பரதேதி


இ. சேர்வைகாரன்:- நன்றாய் இருக்கிறது! அபினித் திராவகத்தின் மயக்கம், குளோரபாரம் முதலியவைகளின் மயக்கத்தைப் போல, அவ்வளவு பிரமாதமாக இருக்காது. நாம் மூக்கு காது முதலியவற்றை அறுத்தவுடனே மயக்கம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் பறந்துபோம். உடனே அவர்கள் மயக்கந் தெளிந்தவர்களாய்த் துள்ளிக் குதித்து அவஸ்தைப்பட்டு இரத்தம் வெளிப்படுவதை நிறுத்துவதற்குத் தக்க முயற்சி எடுத்துக் கொள்வார்கள். ஆகையால், அவர்களுடைய பிராணன் போய்விடுமோ என்ற பயமே வேண்டியதில்லை.

மாசிலாமணி:- சரி, உங்களை யாரும் பிடித்துக் கொள்ளாதபடி நீங்கள் இந்தத் தந்திரத்தைச் செய்தால், பிறகு, அவர்கள் பிழைத்துக் கொண்டாலும் சரி, இறந்து போனாலும் சரி; அதைப்பற்றி நமக்கு அக்கறை இல்லை. நீர் சொன்னபடி அந்த திராவகத்தையே வாங்கி உபயோகப்படுத்தி விடுங்கள்.

இ. சேர்வைகாரன்:- சரி; அப்படியானால், நாங்கள் எல்லோரும் எப்போது புறப்படுகிறது? ரமாமணி எப்போது வருகிறது? நாங்கள் எவ்விடத்தில் சந்திக்கிறது?

மாசிலாமணி:- நீர் ரமாமணியை அழைத்துக் கொண்டு இன்றைய சாயுங்கால ரயிலிலேயே போய்விடும். இன்றைய தினம் இரவில் அவள் இந்த ஊரில் இல்லாமல் போனால், எனக்கும் இந்தப் போலி மனோன்மணிக்கும் நடக்கப் போகும் சாந்தி கலியாணம் எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் சந்தோஷகரமாக நிறைவேறும். அவள் இருந்தால், இன்றைய காரியம் நடவாமல் தடுத்து விடுவாள். அதுவுமல்லாமல், நீர் பட்டணத்தில் வெள்ளிக் கிழமை அன்று நம்முடைய காரியங்களை முடித்த பிறகு ரமாமணியை அழைத்துக் கொண்டு போய்ப் பட்டணத்தில் உள்ள வேடிக்கைகளை எல்லாம் காட்டுவதாகச் சொல்லி, அவளைப் பட்டணத்திலேயே நாலைந்து தினங்கள் நிறுத்தி வையும். அதற்குள் இவ்விடத்தில் நான் என் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளுகிறேன். நீங்கள் திரும்பி