பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

123

அவள் ஒருகால் தன்மீது ஏதேனும் காரணம் பற்றி வருத்தமுற்று இருக்கிறாளோ என்று சந்தேகித்தவனாய், சந்தோஷத்தினால் மலர்ந்து புன்னகை புரிந்த வதனத்தினனாய் அவளை நோக்கி, "என்ன ரமா! உன் முகம் ஒருமாதிரியாக இருக்கிறதே! என்மேல் ஏதாவது கோபம் உண்டா?" என்று நயமாகக் கேட்ட வண்ணம் பள்ளியறைக்குள் நுழைந்து கட்டிலின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு, சிறிது துரத்தில் நின்ற அவளது கையைப் பிடித்து அவளைத் தனக்கருகில் இழுக்க முயன்றான். அவள் சென்னைக்குப் போய் நிரம்பவும் துணிகரமான செய்கைகளை நிறைவேற்றி, வேலாயுதம் பிள்ளை வீட்டார் எல்லோரையும் அங்கஹlனப்படுத்த வேண்டியவள் ஆதலால், தான் அவளை சந்தோஷப்படுத்தி அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் வந்தான். ஆதலால், அவள் வாடிய வதனத்தோடு நின்றதைக் காணவே, அவனது மனம் மிகுந்த சஞ்சலம் அடைந்தது. தான் எப்படியாவது அவளிடம் நயந்து அவளது மனம் மகிழ்ச்சி அடையும்படி அவளிடம் நடந்து, தனது கருத்திற்கு அவள் இசையச் செய்ய வேண்டும் என்ற உறுதி கொண்டவனாய், அவளை ஆசையோடு பக்கத்தில் இழுக்கத் தொடங்கினான். அவன் தனது ரகசியத்தை அறிந்து கொள்ள வில்லை என்று உணர்ந்த ரமாமணியினது மனதில் உடனே பெருத்த தைரியமும் உற்சாகமும் பிறந்தன. அவளது விகாரத் தோற்றம் எல்லாம் உடனே மாறிப் போயிற்று. தான் தவில்காரப் பையனோடு சந்தோஷமாக இருந்ததற்கு இடையூறாக, தான் எதிர்பார்க்காத சந்தர்ப்பத்தில், அந்த நொண்டி வந்து சேர்ந்தானே என்ற விசனமும் ஆத்திரமும் அவளது மனதை விட்டு எளிதில் போகவில்லை. ஆதலால், அவள் எவ்வளவு முயன்றும், இயற்கையாக எழும் மகிழ்ச்சியும் குதுகலமும் உண்டாகவில்லை ஆதலால், அவன் மீது ஏதோ ஒரு காரணத்தைக் குறித்துத் தான் கோபம் கொண்டிருப்பது போல நடிக்க வேண்டும் என்று அவள் உடனே தனக்குள் தீர்மானித்துக் கொண்டவளாய், அவனைப் பார்த்துத் தனது முகத்தைச் சுளித்துக் கொண்டு ஒரு திருப்புத் திருப்பிக் கீழே குனிந்து கொண்டவளாய் முற்றிலும் பிணங்கி சிறிது தூரம் அப்பால் நகர்ந்து, "இருக்கட்டும், போங்கள்.