பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

மாயா விநோதப் பரதேசி

காரியத்தில் நான் உன்னை இறக்கி விடுவேன் என்று நீ நினைக்க வேண்டாம். நான் சொல்லும் காரியத்தை நீ வெகு சுலபத்தில் நிறைவேற்றி விட்டு பத்திரமாகத் திரும்பிவந்து சேர்ந்து விடுவாய். ஆகையால், விஷடம் பிரமாதமாக இருக்குமோ என்று நீ மலைக்க வேண்டாம். உனக்கு நான் கொடுக்கப் போகும் இந்த சிரமத்தில் இன்பமும் கொஞ்சம் கலந்திருக்கிறது" என்றான்.

ரமாமணி சந்தோஷமாகப் புன்னகை செய்து, "என்னுடைய இன்பத்தைத் தாங்கள் கோராத நிமிஷமும் உண்டா ? நான் நாள் முழுதும் அனுபவிக்கும் இன்பம் எல்லாம், தாங்கள் கொடுத்த பிச்சைதானே. உங்களுடைய நினைவை நான் மனசில் எப்போதும் வைத்துக் கொண்டிருப்பது ஒன்றே எனக்கு என்றும் தெவிட்டாத பேரின்ப சுகமாக இருக்கிறது. அதைவிட நான் கண்டு அனுபவிக்கக்கூடிய சுகம் இந்த உலகத்தில் வேறே இருக்கிறதா?" என்று குழந்தை பேசுவது போல மழலையாக மொழிந்தாள். மாசிலாமணி அவளது முகஸ்துதியான சொற்களை உண்மை என்று நம்பி ஆனந்த பரவசம் அடைந்தவனாய் அவளை மறுபடி ஆசையோடு ஆலிங்கனம் செய்து இறுகப் பிடித்துக் கொண்டு, தானும் இடும்பன் சேர்வைகாரனும் சென்னையில் நடத்தத் தீர்மானித்த சதியாலோசனையைச் சுருக்கமாக அவளுக்குத் தெரிவித்து, மேலும் பேசத் தொடங்கி, "கண்ணே! பார்த்தாயா? பட்டணத்தில் உள்ள வேடிக்கைகளை எல்லாம் காட்ட வேண்டும் என்று என்னிடம் நீ இதற்கு முன் பல தடலை சொன்னதற்கும், நான் இப்போது பரிகாரம் தேடி இருக்கிறேன். உன் இச்சையையும் இந்தத் தடவை திருப்தியாக நீ பூர்த்தி செய்து கொள்ளலாம். ஒரு மாச காலம் உனக்குப் பட்டணத்தில் இருக்கப் பிரியம் இருந்தாலும், நீ அப்படியே செய்யலாம்" என்று நிரம்பவும் மன நெகிழ்வோடு கூறினான். அதைக் கேட்ட ரமாமணி, "ஆகா! எனக்கு இன்பம் உண்டாக்குவதாகச் சொல்லி, துன்பத்தை அல்லலா பெரிதாக உண்டாக்கி விட்டீர்கள்? நான் உங்களோடு கூடவே பட்டணம் போய் வேடிக்கைகளை எல்லாம் பார்க்க வேண்டும் என்று சொன்னேனே அன்றி, நான் மாத்திரம் போக வேண்டும் என்றா