பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

145

தினம் காலந்தவறாமல் ரயில் வண்டிகள் வந்திருக்குமா? மறுபடி ஸ்டேஷன் மாஸ்டரை நீ பார்த்தாயா?" என்றார்.

கண்ணப்பா, "இன்று காலையில் அங்கே தான் போய் அவரோடு பேசிவிட்டு வந்தேன். நாம் கேட்டிருக்கும் ஆறு முதல் வகுப்பு வண்டிகளும் நாளைய தினம் காலையிலேயே இந்த ஊருக்கு வந்துவிடும் என்று அவருக்குத் தந்தி வந்திருக்கிறது என்றும், நாம் நாளைய தினம் காலையிலேயே இந்தச் சாமான்களை எல்லாம் கொணர்ந்து சேர்த்துவிடலாம் என்றும், நாம் மாலை நான்கு மணிக்கு வரலாம் என்றும் அவர் சொன்னார்" என்றான்.

வேலாயுதம் பிள்ளை , "சரி, இங்கே இருந்து இவைகளை எடுத்துப் போகவும், நாம் ஏறிப்போகவும் வண்டிகளுக்கு ஏற்பாடு ஆயிருக்கிறதல்லவா?" என்றார்.

கண்ணப்பா, "ஆயிருக்கிறது. சாமான் வண்டிகள் காலையி லேயே வந்துவிடும்" என்றான்.

வேலாயுதம் பிள்ளை, "எல்லாம் சரிதான். நாம் இத்தனை ஏற்பாடு களையும் செய்து நிச்சயதார்த்தத்தை இவ்வளவு சிறப்பாக நடத்தப் போகிறோம். இந்தக் கலியாணத்தை நிச்சயப்படுத்திக் கொடுத்த நம்முடைய சுவாமியார் ஐயா இல்லாத குறைதான் என் மனசில் பெருத்த குறையாக இருந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டு வருகிறது. அந்த விஷயத்தில் தான் என்ன செய்கிறதென்பது தெரியவில்லை" என்றார்.

கண்ணப்பா, "ஆம், எல்லோருக்கும் அதே சங்கடந்தான் இருந்து வதைக்கிறது. இப்போது அதே சங்கதியைப்பற்றித் தான் நம்முடைய வடிவு என்னிடம் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தாள். சுவாமியார் ஐயா இல்லாத கலியாணம் ஒரு கலியாணமா என்று அவள் குறைப்பட்டுக் கொள்வது இவ்வளவு அவ்வளவு அல்ல. இன்னொரு தடவை நான் கும்பகோணம் போய், அவர் குறித்த ஆற்றுப் பாலத்தின் கண்வாயில் எழுதி வைத்துவிட்டு வர வேண்டும் என்று என்னிடம் அவள் இப்போதுதான் கேட்டுக்

மா.வி.ப.1-10