பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

மாயா விநோதப் பரதேசி

கொண்டாள். அவர் பலவிதமாக உருமாறுவதில் கெட்டிக்காரர் ஆதலால், எவரும் அறியாதபடி ஏதேனும் வேஷம் போட்டுக் கொண்டு அவர் பட்டணம் வந்து நாம் இறங்கப் கோகும் ஜாகைக்குள் வந்து விட்டால், அவ்விடத்தில் மறைவாக இரண்டொரு நாள் இருந்துவிட்டுப் போகலாம் என்று நாம் எல்லோரும் நிரம்பவும் வருந்தி அழைப்பதாக எழுதும்படி சொல்லுகிறாள். உங்களிடம் கேட்டுக் கொண்டு கும்பகோணம் போய்விட்டு வர நினைத்தேன்" என்றான்.

வேலாயுதம் பிள்ளை, "ஆம், வாஸ்தவம் தான். குழந்தை வடிவு சொல்வது நல்ல யோசனை தான். அதுவுமன்றி சென்னப் பட்டணம், இவ்விடத்திற்குத் தூரதேசம் ஆகையால், அவர்களுடைய அடையாளம் எவருக்கும் தெரியப் போகிற தில்லை. ஆகையால், அவர்கள் சுலபமாக வந்துவிட்டுப் போகலாம். நீ இப்போதே வண்டியில் கும்பகோணம் போய், இந்தச் சங்கதிகளை எல்லாம் பாலத்தடியில் எழுதி வைத்துவிட்டு வா. மறுபடி நாளைய தினம் காலையில், நீ ஒருநடை அங்கே போய், அவர் எழுதி இருக்கும் மறுமொழியைத் தெரிந்து கொண்டு வரலாம்" என்றார்.

அந்தச் சமயத்தில் வேலைக்காரன் ஒருவன் நடையில் இருந்தபடி, "எஜமானே! தபாற்காரன் தபால்கள் கொடுத்து விட்டுப் போயிருக்கிறான்" என்று பணிவாகக் கூறினான்.

அதைக் கேட்ட கண்ணப்பா, "இங்கே கொண்டுவா" என்று அவனுக்கு மறுமொழி கூற, உடனே வேலைக்காரன் உள்ளே வந்து சென்னையில் இருந்து அவர்களுக்கு வழக்கமாக வரும் இங்கிலீஷ் தமிழ் முதலிய சமாசாரப் பத்திரிகைகளையும், நாலைந்து கடிதங்களையும் கண்ணப்பாவிடம் கொடுத்து விட்டு வெளியிற் போய்விட்டான். உடனே கண்ணப்பா கடிதங்களில் இருந்த மேல் விலாசங்களைப் பார்த்து, எல்லாம் வேலாயுதம் பிள்ளையின் பேருக்கே வந்திருந்ததை அறிந்து, எல்லாவற்றையும் தனது தந்தையாருக்குப் பக்கத்தில் விசிப்பலகையின் மீது வைத்தான். வேலாயுதம் பிள்ளை எல்லாவற்றிலும் மேலே