பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

147

இருந்த கடிதத்தை நிதானமாக எடுத்துத் தமது மனத்திற் குள்ளாகவே படிக்கத் தொடங்கினார்.

கண்ணப்பா உடனே தரையில் உட்கார்ந்து கொண்டு, தனது கையிலிருந்த சமாசாரப் பத்திரிகைகளை எடுத்துப் பிரித்துப் பக்கங்களை மேன்போக்காகத் தள்ளி ஒவ்வொரு பத்தியிலும் இருந்த தலையங்கங்களை மாத்திரம் படித்துக் கொண்டு, ஏதேனும் விசேஷச் செய்தி இருக்கிறதோ என்று பார்த்துக் கொண்டே போனவன் திடுக்கிட்டு, "அப்பா! பயங்கரமான ஒரு சங்கதி வந்திருக்கிறது. பட்டணத்தில் நம்முடைய சம்பந்திப்பிள்ளை வீட்டில் கொள்ளைக்காரர்கள் நுழைந்து விட்டார்களாமே!" என்று வியப்போடு கூறினான்.

அதைக் கேட்ட வேலாயுதம் பிள்ளையும் திடுக்கிட்டு, "ஆ! என்ன! என்ன! நம்முடைய பட்டாபிராம பிள்ளையின் பங்களாவிலா திருடர்கள் புகுந்தார்களாம். அவர்களுக்கு ஏதாவது உபத்திரவம் ஏற்பட்டதா? பொருள் ஏதாவது களவு போய் விட்டதா? சங்கதியைப் படி கேட்கலாம்" என்று வியப்போடு அவசரப்பட்டுக் கூறினார். கண்ணப்பா பயங்கரமான சங்கதி வந்திருக்கிறதென்று சற்றுமுன் கூறிய குரலோசை சமயலறைக்குள் இருந்த திரிபுரசுந்தரியம்மாளுக்கும், வடிவாம்பாளுக்கும் நன்றாகக் கேட்டது. அவர்கள் இருவரும் உடனே பதறி வெலவெலத்துப் போய், அவ்விடத்தை விட்டு விரைவாக வெளியில் வந்தனர். திரிபுரசுந்தரி அம்மாள் கண்ணப்பாவிற்கருகில் வந்து ஆவலே வடிவாக நின்றாள். வடிவாம்பாள் கம்பத்தின் மறைவில் மாமனாருக்குத் தெரியாதபடி நின்று கவனித்துச் செவி கொடுத்துப் பதைபதைத்து நின்றாள்.

உடனே கண்ணப்பா அடியில் கண்ட செய்தியைப் படிக்கத் தொடங்கினான்:--

ஓர் அதிசய சம்பவம்

சென்னையில் பெரிய கலெக்டர் உத்தியோகம் பார்த்துவரும் பட்டாபிராம பிள்ளை என்ற கனவானும் அவரது ஒரே புத்திரியும்