பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

மாயா விநோதப் பரதேசி

வைக்கப்பட்டிருந்தது அன்றி, தனியாக ஒரு கடிதமும் இருந்தது. கடிதத்தில் இருந்த விவரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில், அவர் புகைப்படத்தைத் திறந்து பார்க்காமல், மடியில் வைத்துக் கொண்டு, கடிதத்தை எடுத்துப் பிரித்து எல்லோர்க்கும் கேட்கும்படியாகப் படிக்கலானார். அது அடியில் வருமாறு எழுதப் பெற்றிருந்தது:-

ம-ா-ா-ஶ்ரீ மகா கனம் பொருந்திய சம்பந்திப் பிள்ளை அவர்களுக்கு அடியேன் பட்டாபிராமன் அநந்தமான தெண்டனிட்டு எழுதுவது; உபயக்ஷேமம்.

சனிக்கிழமை அன்று நான் தங்களிடம் இருந்து தந்தி வருவித்த பிறகு இவ்விடத்தில் என்ன நடந்ததென்பதைத் தெரிந்து கொள்ளத் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நிரம்பவும் ஆவல் கொண்டிருக்கலாம். தாங்கள் தந்தியில் எழுதியிருந்தபடி அவர்கள் நம்முடைய எதிரிகளைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பற்றி சந்தேகமே இல்லை. பகலில் வந்தவர்கள் உங்களுடைய நன்மையைக் கோருகிறவர்கள் போலவே பேசி, என் பெண்ணினுடைய நடையுடை பாவனைகளை எல்லாம் பழித்ததன்றி, தங்கள் குடும்பத்தாரின் ஆசார ஒழுக்கங்களுக்கும் அவளுக்கும் சிறிதும் பொருத்தமில்லை என்று பலவகையில் பெண்ணின் மனதைக் கலைத்தார்களாம். அந்தச் சமயத்தில், உங்களுடைய தந்தியோடு நானும் பங்களாவிற்கு வந்து சேர்ந்தேன். அதன் பிறகு பங்களாவில் நடந்த விருத்தாந்தங்கள் எல்லாம், இன்றைய தினம் இவ்வூரில் இருந்து வெளியாகும் சமாசாரப் பத்திரிகைகளில் விவரமாக வெளியிடப்பட்டிருக்கின்றன. அந்தப் பத்திரிகைகள் தங்களுக்கும் வருகின்றன ஆகையால், தாங்கள் அவைகளில் இருந்து விவரங்களை நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். அநேகமாய் இந்தக் கடிதமும் பத்திரிகைகளும் ஒன்றாகவே உங்களிடம் வந்து சேரும் என்று நினைக்கிறேன்.

ஆனாலும் அதிர்ஷ்டவசமாய், எதிரிகளைச் சேர்ந்த ஒருவன் அகப்பட்டுக் கொண்டிருக்கிறான். அவன் நன்றாக அடிபட்டு