பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

167

அவளைப் பற்றிய ரகசியம் அதிகரிக்க அதிகரிக்க, அவளது விஷயத்தில் மாசிலாமணியின் மனதில் ஏற்பட்ட கவர்ச்சி முன்னிலும் நூறு மடங்கு அதிகரித்து அவனை வதைக்கத் தொடங்கியது. அன்றைய தினம் இரவில் தனக்குக் கிடைக்கப் போகும் ஆநந்தத்தை அவன் உலகில் எவரும் அநுபவித்தறியாத புதுமையான ஆனந்தமாக மதித்ததன்றி, தன் மனதில் வேறு எவ்வித நினைவையும் கொள்ளாமல் அதே நினைவைக் கொண்டு ஊணுறக்கத்தையும் நாடாமல், தனது விடுதியில் மாறி மாறி உட்காருவதும் நடப்பதுமாய்ப் பொழுதை நலிந்து போக்கிக் கொண்டிருந்ததன்றி, அடிக்கடி தனது வேலைக்காரிகளைக் கூப்பிட்டு, சோபன அறையை அவர்கள் எவ்விதம் சிங்காரிக்க வேண்டுமென்றும், எவ்விதமான பகஷ்ண பலகாரங்களை அவ்விடத்தில் வைக்க வேண்டுமென்றும், சோபனப் பெண்ணை எவ்விதமான ஆடையாபரணங்களால் எப்படி அலங்கரிக்க வேண்டுமென்றும் உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருந்தான். அவன் தனக்குச் சொந்த மனைவி வாய்க்கும் காலத்தில், அவளும் தானும் சயனிப்பதற்காக வேண்டுமென்று பிரத்தியேகமாக ஒரு சயன மாளிகை அமைத்து, அதை அவன் உபயோகப்படுத்தாமல் மூடியே வைத்திருந்தான். அது அந்த மாளிகையில் இரண்டாவது உப்பரிகையின் வடகிழக்கு பாகத்தில் நிரம்பவும் அற்புதமாக அமைக்கப் பெற்றிருந்தது. அந்த சயனக்கிரகம் விசாலமான ஒரு கூடத்தளவு கட்டப்பட்டிருந்தது. அதன் தரையும் சுவர்களும், செங்கல், சுண்ணாம்பு முதலியவற்றால் ஆக்கப்படாமல், பீங்கான் போன்ற வழுவழுப்பான வெள்ளைச் சலவைக்கல்லின் சிறிய சிறிய சதுரத்துண்டுகள் பதிப்பிக்கப்பெற்று முகத்தைக் காட்டும் கண்ணாடிபோல் அமைந்திருந்தன. எங்கு பார்த்தாலும், விநோதமான இங்கிலீஷ் கொடி செடிகள் நிறைந்த பித்தளைத் தொட்டிகளும், இடை இடையே கமகமவென்று மணங்கமழ்ந்த ரோஜா, ஜாதிமல்லிகை, மருக்கொழுந்து, ஸம்பங்கி முதலிய புஷ்பஜாதிகள் குலுங்கி நின்ற வெள்ளித் தொட்டிகளும் அந்தக் கூடத்தில் பத்தி பத்தியாக நிறைந்து, அவை ஒர் உத்தியானவனத்தை வடிகட்டின ஸாரம் போலவும் அதன் உயிர்நிலை போலவும் அமைந்து மனோரம்மியமான குளிர்ச்சி