பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

மாயா விநோதப் பரதேசி

யையும் மாதுரியமான நறுமணத்தையும் உண்டாக்கிக் கொன்டிருந்தன. அந்த அழகிய கூடத்தின் மேல்பாகம் முழுதும் சிற்றின்ப லீலைகளைக் காட்டிய அதிசயமான உருவங்கள் தங்க ரேக்கினால் இழைக்கப் பெற்றதாய் விளங்கியதோடு, அதில் வெள்ளை, சிவப்பு, ஊதா, நீலம், மஞ்சள் முதலிய எண்ணிறந்த நிறங்களில் மணி மணியாகப் பொருத்தப் பெற்றிருந்த மின்சார விளக்குகளும், இடையிடையே மின்சார விசிறிகளும், ரஸ் குண்டுகளும், தங்க ரேக்கினாலான கந்தருவப் பதுமைகளும், ஸ்படிகரது விளக்குகளும், வால்ஷேட், குளோப்புகளும், எல்லா வற்றையும் பின்னிக் கொண்டிருந்த பெரும் பெரும் செயற்கைப் புஷ்ப ஹாரங்களும் நிறைந்து, மனிதர் படுத்து நிமிர்ந்து பார்த்தால், அவர்களது கண்களையும் மனத்தையும் ஒரே கூடிணத்தில் காந்தம் போலக் கவர்ந்து கொள்ளும் அபார சக்தி வாய்ந்து அழகுத் திரளாய் விளங்கின. அந்த மாளிகையில் கிழக்குத்திக்கில் இருந்த பூஞ்சோலையைப் பார்த்தபடி அந்த சயனக்கிரகத்தில் அடுத் தடுத்து நான்கு ஜன்னல்கள் அமைந்திருந்தன. மேற்படி ஜன்னல்களில் இரும்புக் கம்பிகளுக்குப் பதில், தடித்த பவளக் கொடிகள் கம்பிகள் போல நறுக்கி நறுக்கி, தங்கமுலாம் பூசப்பெற்ற வெள்ளி நிலையில் பொருத்தப்பெற்று எவ்விடத்திலும் காணப்படாத புதுமையாக இருந்தன. தங்கக்கொடிகளினால் அழகான வேலைப்பாடுகள் செய்யப்பெற்ற தந்தத் தகடுகள் போர்த்தப் பெற்ற அபூர்வமான கதவுகள் மேற்படி ஜன்னல்களின் உட்புறத்தில் காணப்பட்டன. மேற்படி ஜன்னல்களை அடுத்தாற் போல தேர் சிங்காரம் போலவும், முத்துப் பல்லக்குப் போலவும், பளபளவென மின்னிய ரஸ்மணிகளாலும், மயில் தோகை களாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான முத்துக்கட்டில் தேவேந்திரனது விமானமோ, அல்லது, மன்மதனது வஸந்த உற்சவப்பளிங்கு மாடமோ என அதிசயக் களஞ்சியமாக அமைந்திருந்தது. அந்த முத்துக்கட்டிலின் மேல்பாகங்களும், நான்கு பக்கங்களும் நவரத்னங்களால் இழைக்கப்பெற்று, சகலமான வசதிகளும் நிறைந்து, ஒரு மகாராஜனது சிம்மாசனம் போல முன் பக்கத்தில் படிகள் பெற்று ஒரே ஜோதி மயமாகக் காணப்பட்டது. அதன் மீது பஞ்சைக் காட்டிலும் அதிமிருது