பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

மாயா விநோதப் பரதேசி

எப்போதும் ஒன்றைக் காட்டிலும் விசேஷமான இன்னொன்றை அநுபவிக்க வேண்டுமென்ற ஆசைகொண்டு எப்போதும் அலைந்து திரிபவன். இப்படிப்பட்ட மனப்போக்கு உடைய மனிதருக்கு ஒரே ஒரு ஸ்திரீயினிடத்தில் நீடித்த வாஞ்சையும், வேரூன்றிய பற்றும் இருப்பது துர்லபம்; ஆகையால், இவன் இவ்வளவு அமர்க்களமான வைபவங்களோடு சோபனம் நடத்தும் புதுப் பெண்ணோடு இவன் ஒரு நாழிகை காலம் இருப்பதற்குள் இவனது மனம் அந்தப் பெண்ணை வெறுத்து, இன்னொருத்தியை நினைத்து ஆசைகொள்ளத் தொடங்கும். ஆகையால், இவனுக்கு எதிலும் திருப்தியும் நீடித்த பற்றும் உண்டாகவே போகிறதில்லை. குடிசையிலிருப்பவன் எவ்விதமான மனப்பான்மையோடு தனது புதிய மனைவியை அடைகிறான்? “இவளே நம்முடைய ஆயுசு காலம் முடிய நம்மோடு கூட இருந்து நம்முடைய சுகதுக்கங்களை எல்லாம் பகிர்ந்து கொள்ளப் போகும் வாழ்க்கைத் துணைவி. கடவுள் தம்முடைய அபாரமான பெருங்கருணையால் இவளே நமக்குத் தகுந்த துணைவியென்று தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கிறார். இவளிடம் எவ்விதமான குற்றங்குறைபாடுகள் இருந்தபோதிலும், அவைகளையெல்லாம் அத்தனை அழகாகப் பாவித்து, கடவுள் உதவிய அற்பத்தை நாம் அக்ஷயமாக மதித்து, அதைக் கொண்டே திருப்தியடைந்து, அதனால் உண்டாகும் இன்ப துன்பங்களையே பேரின்பமாக ஏற்று, அதற்கு மேல் வேறெதையுங் கண்டு காமுறாமல் ஒரு நிறையில் நிற்க வேண்டும் என்ற மனப்பான்மையோடு அந்த ஏழை மனிதன் தனது புது மனைவியை அடைகிறான். ஆகையால், அந்தப் புதிய சோபனப் பெண் என்றும் தெவிட்டாத இன்பக் களஞ்சியமாகவும், தன் குலத்தை விளக்கவந்த அருந்தெய்வமாகவும் அவனுக்குத் தோன்றுகிறாள். சுகமென்பது மனது ஏற்படுத்தும் ஒரு பிரமையே அன்றி, உண்மையில் சுகம் அல்லது துக்கம் என்பது பிரத்தியேகமாக எதிலும் கிடையாது. உலக நியாயம் அப்படி இருக்க, இந்த மாசிலாமணி இப்படி எல்லாம் மதியிழந்து சிற்றின்பங்களில் அதிகமான சிற்றின்பம் எவ்விடத்தில் இருக்கிறதென்று தேடியலைந்து திண்டாடுகிறானே! அந்த இன்பம் தன் மனசிலேயே இருக்கிறதன்றி, வெளியுலகத்தில் இல்லை என்பது இந்த மூட