பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

மாயா விநோதப் பரதேசி

திருக்கிறோமே? அதை நிறுத்தி வைக்க வேண்டியது தானே? தாங்கள் இருவரும் இல்லாமல், நாங்கள் மங்களகரமான காரியம் எதையும் செய்ய எங்கள் மனம் சம்மதிக்காது. தாங்கள் மறுபடி வெளிப்பட்டுத் தங்களுடைய சம்சாரத்தை அழைத்துக் கொண்ட பிற்பாடுதான் எல்லோருமாகப் போய், நிச்சயதார்த்தத்தை நடத்த வேண்டும்.

சாமியார்:- "என்னைப்பற்றி நீங்கள் நிச்சயதார்த்தத்தை நிறுத்த வேண்டாம். நம்முடைய ஏற்பாட்டின்படி அதை நீங்கள் நடத்துங்கள். சௌகரியப்படும் பட்சத்தில் நான் அன்றைய தினம் பட்டணத்துக்கு வருகிறேன். முடிவாக நாம் கலியாணம் நடத்துவதற்குள், நான் என்னுடைய உத்தேசத்தை நிறைவேற்றி விட்டு வெளிப்படுகிறேன். பிறகு கலியாணத்தை நடத்துவோம். அதுவரையில் நீங்கள் எல்லோரும் நிரம்பவும் ஜாக்கிரதையாக இருங்கள். யாரும் தனியாக எங்கும் போகவேண்டாம். இரவிலும், பகலிலும் எப்போதும் பத்து இருபது ஆட்களைக் கூடவே வைத்துக் கொண்டிருங்கள். அன்னியரிடம் இருந்து சாமான் வாங்குவதை நன்றாகக் கவனித்து வாங்குங்கள். எதிரிகள் பெருத்த சதியாலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகையால் நீங்கள் யாரும் அசட்டையாக இருக்கக்கூடாது. ஜாக்கிரதை" என்று மேலும் ஏதோ கூற முயல்கையில் அவர் இருந்த அறைக்கு வெளியில் அழுகைக் குரல்கள் உண்டாயின. அவர் உடனே படுக்கையில் பழையபடி படுத்துக் கொண்டு, வந்திருப்பது யார் என்று விசாரிக்கும்படி கண்ணப்பாவிற்கு சைகை செய்ய, அவன் கதவின் தாழ்ப்பாளை விலக்கி மெதுவாகக் கதவை திறந்து வெளியில் பார்க்க, முற்றிலும் கலங்கி அழுத வண்ணம் தலைவிரி கோலமாக வந்திருந்த வேலாயுதம் பிள்ளை, அவரது மனைவி, சுந்தரம் பிள்ளை, அவரது மனைவி ஆகியவரும் கட்டிலடங்காப் பதைப்பும் ஆவலும் கொண்டு உள்ளே நுழைந்தனர்.