பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

183

கூடியவைகளா? அல்லது இரண்டு நாள்களில் தான் சேகரிக்கக் கூடியவைகளா? சட்டைநாத பிள்ளையின் காலத்திலிருந்தே இந்த இடம் சிறுகச் சிறுக விருத்தியடைந்து இப்போது இந்த நிலைமைக்கு வந்திருக்க வேண்டும். எவ்வளவோ பிரயாசைப் பட்டு, பணத்தை வாரி இறைத்து இத்தனை ஏற்பாடுகளையும் செய்திருக்கும் இவன் முடிவில் ஏமாற்றமடையப் போகிறானே என்பதை நினைக்க, நினைக்க என் மனம் இவனைக் குறித்து நிரம்பவும் இரங்கி வருந்துகிறது. தனக்குச் சொந்தமல்லாத வஸ்துவைக் கொணர்ந்து வைத்துக் கொண்டு சந்தோஷமடைய வேண்டுமென்று துராசை கொள்வோருடைய கதியெல்லாம் இப்படித்தான் சகிக்க முடியாத துயரமாகவும் ஏமாற்றமாகவும் முடியும்," என்று தனக்குத்தானே நினைத்துப் பலவாறு எண்ணமிட்டிருக்கையில், கடிகாரத்தில் டான் டான் என்று மணி எட்டு அடித்தது. அதே நிமிஷத்தில் அந்த சயனமாளிகையின் கதவை மெதுவாகத் திறந்து கொண்டு மாசிலாமணி உள்ளே நுழைந்தான். நுழைந்தவன் கதவை மறுபடியும் மூடி உட்புறத்தில் தாளிட்டுக் கொண்டு சோபனப் பெண் எங்கே இருக்கிறாளென்று பார்க்க வேண்டுமென்ற ஆவல் கொண்டவனாய்த் தனது பார்வையை நாற்புறங்களிலும் ஒரே நொடியில் சுழற்றிப் பார்த்த வண்ணம் கட்டிலை நோக்கி நடந்தான். கதவு திறந்துகொண்ட உடன் மன்மதாகாரமான அழகிய அலங்காரத் தோற்றத்தோடு உள்ளே நுழைந்த மாசிலாமணியை ஒரே பார்வையில் பூர்த்தியாகப் பார்த்துக்கொண்ட கந்தசாமி சகிக்கவொண்ணாத நானமும் கூச்சமும் கொண்டவன் போல விரைவாக ஒடி, கட்டிலின் அப்புறத்தில் போய்த் தலைகுனிந்து அப்புறம் பார்த்தபடி நின்று கொண்டான். அவ்வாறு அவன் சென்ற போது அவனது கால்கள், கைகள் முதலிய சர்வாங்கமும் அழகாகவும் வசீகரமாகவும் வளைந்து கொடுத்து தத்ரூபம் உத்தம ஜாதி ஸ்திரீயின் தோற்றத்தை அவனுக்கு உண்டாக்கினவாகையால், அந்த ஒரே லாகலம் மின்னல் தோன்றி மறைவது போல மாசிலாமணியின் உயிரைக் கொள்ளை கொண்டு போயிற்று. சோபனப்பெண் தனது புதிய ஆபரணங்களில், கோடி ரதிதேவிகளின் அழகுகளெல்லாம் ஒன்று சேர்ந்தது போல தெய்விகமான தோற்றத்தோடு