பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

189

தொலையமாட்டேனென்கிறதே" என்பான்; அதற்கடுத்த நான் அடியிலும் உதையிலும் இறங்குவான்; அதற்கடுத்த நாள் பெண்ணை அவளுடைய பிறந்த வீட்டிற்கு அனுப்ப வண்டி தயாரித்து விடுவான். இவனுடைய குணமும், சபல புத்தியும் உலகப் பிரசித்தமானவைதானே. இன்று கரும்பு, நாளையதினம் இரும்பு, மூன்றா நாள் வேம்பு, அதற்கடுத்தநாள் பாம்பு, அடுத்த நாள் வந்த வழி திரும்பு என்று எண்ணும் மனப்போக்குடைய மனிதப் பதராகிய இவன் ஸ்திரிகளை ஏமாற்றும் விதம் நன்று நன்று நான் அதிக நேரம் பேசாதிருந்தால் இவன் ஒரு வேளை எழுந்து என்னிடம் வந்தாலும் வருவான். அதற்கு நான் இடம் கொடுக்கக் கூடாது. இவன் பேசியதில் இன்னொரு விஷயமும் ஆச்சரியமாக இருக்கிறது. இவன் பட்டாபிராம பிள்ளையின் மகளாகிய மனோன்மணியம்மாளின் மேல் ஆசை கொண்டு, ஆள்களை அனுப்பி அவளை அபகரித்துவரச் செய்தா என்பது, வேலைக்காரியின் சொல்லிலிருந்து நன்றாகத் தெரிந்தது. அவர்கள் ஆள் மாறாட்டமாக என்னை எடுத்து வந்து விட்டதாக நான் எண்ணினேன். நான் மனோன்மணியம்மாள் போலவே வேலைக்காரியிடம் நடித்தேன். அதையெல்லாம் அவள் இவனிடம் போய்த் தெரிவித்திருப்பான் என்பது நிச்சயம். அதன் பிறகு, நான் மனோன்மணியம்மாள்தான் என்ற நம்பிக்கையின் மேலே இவன் கலியாணச் சடங்கையும் நடத்தினான். காரியம் அவ்வளவு தூரம் நடந்திருக்க, இப்போது இவன் என்னுடைய பெயர் இன்னதென்பது தெரியவில்லை என்று சொல்லவேண்டிய காரணமென்னவென விளங்கவில்லை. நான் மனோன்மணியல்ல என்பதை இவன் ஒருவேளை அதற்குப் பிறகு தெரிந்து கொண்டிருப்பானோ என்னவோ தெரியவில்லை; இருக்கட்டும். இவனோடு தந்திரமாகப் பேசி இவன் என்னை யாரென்று எண்ணிக்கொண்டிருக்கிறானென்பதை அறிந்து கொள்வதோடு இவனுக்கு நல்ல புத்தி கற்பித்து வைக்கிறேன்" என்று தீர்மானித்துக் கொண்டு, அப்போதும் உத்தம ஜாதி ஸ்திரீயின் தோற்றத்திற்குச் சிறிதும் பழுதில்லாமல் காணப்பட்டு மெதுவாகத் தனது முகத்தைச் சிறிதளவு நிமிர்த்தி அவனது முகத்தைப் பார்த்து வசீகர மாகப் புன்னகை செய்துவிட்டு மறுபடி தனது முகத்தைக் கீழே